கர்நாடகா முதல்வர் பதவிக்கு மும்முனை போட்டியா?... இவர் லிஸ்ட்லையே இல்லையே!

May 15, 2023,09:05 AM IST
பெங்களுரு : கர்நாடக முதல்வராக டி. கே. சிவக்குமார் அல்லது சித்தராமையா ஆகியோரில் ஒருவர் வருவார் என்று பார்த்தால் 3வது நபரின் பெயரும் தற்போது அடிபடுகிறது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி விட்டது. காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்களுக்கு பிறகு அமோக வெற்றியை பெற்றுள்ளதால் புதிய நம்பிக்கையுடன் காணப்படுகிறது. வெற்றி கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மிக முக்கியமான சவாலான, இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தற்போது தான் காங்கிரஸ் கட்சி உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களை கைப்பற்றி, தனிப் பெருன்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் தற்போது காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளதால் காங்கிரசின் கை ஓங்கி இருக்கிறது. ஆனால் கட்சியில் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. 



ஏற்கனவே சித்தராமைய்யாவும், சிவகுமாரும் முதல்வர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர். இருவருமே தங்களுக்கு தான் முதல்வர் பதவி வேண்டும் என்பதில் விடாபிடியாக இருக்கிறார்கள். ரிசல்ட் வருவதற்கு முன்பே தனது அப்பா தான் சிஎம் என சித்ராமைய்யா மகன் கூறி இருந்தார். சிவக்குமாரோ, தான் பலமுறை விட்டுக் கொடுத்து விட்டதால் இந்த முறை விட்டு கொடுக்க தயாராக இல்லை என கண்டிப்பாக சொல்லி விட்டார்.

சோனியாகாந்தி முடிவு செய்வார்

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியே முடிவு செய்வார் என்று கர்நாடக சட்டசபை காங்கிரஸ் கட்சி தீர்மானம் போட்டுள்ளது. இதற்கிடையில் கர்நாடக முதல்வர் பதவிக்கு இருவர் அல்ல, மூன்றாவது நபரும் போட்டி களத்தில் உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் காங்கிரஸ் கட்சியில் உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. 

அந்த மூன்றாவது நபர் வேறு யாரும் இல்லை கட்சியின் தலைவர் மல்லிகார்னஜூன கார்கே தான். இவர் நம்ம லிஸ்ட்லையே இல்லையே என கட்சிக்குள்ளேயே பலர் ஷாக் ஆகி உள்ளனர். தனது மகனும் கர்நாடக முதல்வர் பதவிக்கான போட்டி களத்தில் உள்ளதாக மல்லிகார்ஜூன கார்கேவின் தந்தை சிவசங்கரப்பா தெரிவித்துள்ளார். மூன்று பேருமே கட்சியின் சீனியர்கள். மூன்று பேரும் முதல்வர் பதவியை விட்டுத் தர தயாராக இல்லை. 

சித்தராமைய்யா, சிவசங்கர் இடையே தான் போட்டி என்றால் மல்லிகார்ஜூன கார்கே முடிவு எடுக்கலாம். போட்டியில் அவரும் இருப்பதால் எப்படி அவர் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வார்? அப்படியே செய்தாலும் முதல்வர் பதவி வேண்டாம் என அவர் விட்டு தருவாரா? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்