இனி இங்கே.. கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனை செய்யக் கூடாது.. எங்கே தெரியுமா?

Mar 12, 2024,01:28 PM IST

பெங்களூரு:  பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இரண்டிற்கும் கர்நாடக  சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.


பஞ்சு மிட்டாயை விரும்பாதவர்களே இருக்க முடியாது. குட்டீஸ்கள் முதல் பாட்டீஸ்கள் தாத்தாக்கள் வரை அதை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம். பட்டி தொட்டி முதல் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் இது கிடைக்கும். பஞ்சு மிட்டாயை சுவைத்து சாப்பிடுவதே ஒரு தனிக் கலைதான். குழந்தைகளை கவரும் விதத்தில், பல வண்ணங்களில் காட்சி அளிக்கிறது இந்த பஞ்சு மிட்டாய். 


இத்தகைய சிறப்புடைய பஞ்சுமிட்டாய்க்கும், இதற்கு அடுத்தார் போல் அனைவரையும் கவரும் தன்மை உடைய கோபி  மஞ்சுரியனுக்கும் தான் தற்போது ஆபத்து வந்துள்ளது. சைவப் பரியர்கள் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் உணவுகளில் முக்கியமானது கோபி மஞ்சுரியன். இதன் சுவையை சொன்னால் புரியாது சுவைத்தால் தான் தெரியும். அந்த அளவிற்கு சுவையும், மணமும் , கலரும் கொண்டது கோபி மஞ்சுரியன்.  சிக்கனுக்கு சிறந்த சைவ மாற்று உணவு இது. இதற்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையானவர்களும் உண்டு.




இத்தகைய தன்மை கொண்ட பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சுரியன் இரண்டிலும் புற்றுநோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களை உண்டாக்க கூடிய முக்கிய காரணமாக இருக்கும் ரசாயன வேதிப் பொருள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டதும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக முழுவதும் இருந்து 170க்கும் மேற்பட்ட இடங்களில் பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சுரியன்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர்.


அந்த ஆய்வின் முடிவில் நச்சு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஆய்வில், மாநிலம் முழுவதும் ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்ட 170க்கும் மேற்பட்ட மாதிரிகளில் , 100க்கும் மேற்பட்டவைகளில் பஞ்சு மிட்டாய்களில் தீங்கு விளைவிக்கும் ரோடமைன்-பி மற்றும் கோபி மஞ்சுரியனில் சன்செட் எல்லோ கலர் மற்றும் டாட்ராசிவ் ஆகிய ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதையடுத்து  பஞ்சுமிட்டாய், கோபி மஞ்சுரியனுக்கு கர்நாடக சுகாதாரத்துறை  தடை விதித்துள்ளது. மேலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது கர்நாடக அரசு.


ஏற்கனவே, இதே போன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய்களிலும் நச்சு தன்மை கொண்ட நிறமிகள் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு இதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாட்டில் வெள்ளை பஞ்சுமிட்டாய் மட்டுமே விற்கப்படுகிறது. இதே போல கோவாவில் விற்கப்படும் கோபி மஞ்சுரியனிலும் நச்சுதன்மை கொண்ட நிறமி பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்