வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. ரீ என்ட்ரி ஆகும்.. "முத்து"!

Nov 29, 2023,05:33 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் டிசம்பர் 8ஆம் தேதி மீண்டும் ரீ ரிலீஸ்  செய்யப்படவுள்ளதாக கவிதாலயா பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


தற்போது கோலிவுட்டில் புதிய பேஷன் என்னவென்றால், 90களில் வெளிவந்த படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த நாயகன், விருமாண்டி ஆகியவை ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அடுத்து  ஆளவந்தான் வரவுள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம்  வெளிவர உள்ளது.


கடந்த 1995 ஆம் ஆண்டு முத்து திரைப்படம் வெளியானது. இப்படத்தை கே .எஸ் ரவிக்குமார் இயக்கினார். கவிதாலயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, ராதாரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு, விசித்ரா என பெரிய ரசிகர் பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு மாபெரும் வெற்றி பெற்றது.




இந்தியாவில் மட்டும் இல்லாமல் ஜப்பானிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அதிரடியான திரைப்படமாக இது அமைந்ததே இதன் பெரு வெற்றிக்குக் காரணம். இப்படத்தில் ரஜினிகாந்த், முதல் பாதியில் நகைச்சுவையாகவும், இரண்டாவது பாதியில் சென்டிமென்டாகவும், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 


இப்படத்தில் வரும் "தீபாவளி பரிசு காத்திருக்கிறது" என்ற நகைச்சுவை காட்சி அன்று முதல் இன்று வரை பிரபலமாக பேசப்படுகிறது. படத்தில் ரஜினி பேசிய வசனங்களான "நான் எப்ப வருவேன்.. எப்படி வருவேன்னு ..என்று யாருக்கும் தெரியாது.. ஆனால்.. வர வேண்டிய நேரத்துல ..கரெக்டா வருவேன்".. என்ற மாஸான டயலாக் ரசிகர்கள் மத்தியில் பட்டைய கிளப்பியது. பாடல்கள் மற்றும் இசை மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.


மீனாவும் ரஜினியும் சேர்ந்து ஆடிய பாடல் காட்சிகள் மிகவும் துள்ளலாக இருக்கும். அதிலும் மீனாவின் அழகை சொல்ல முடியுமா அந்த அளவிற்கு க்யூட்டாக இருக்கும்.  டிசம்பர் 8ம் தேதி முத்து படம் ரீ ரிலீஸாகிறது. தமிழ் மட்டுமல்லாம், தெலுங்கிலும் படம் வெளியாகிறது.


நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் மாதம் என்பதால் பிறந்தநாள் பரிசாக முத்து படம் ரசிகர்களுக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்!

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்