திருவனந்தபுரம்: கேரள மாநில லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளராக கே.ஷைலஜாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதிகளிலும், 2வது பெரிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
4 சிபிஐ வேட்பாளர்கள்

இதில் இந்திய கம்யூனிஸ்ட் தனது வேட்பாளர்களை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடுகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். திருவனந்தபுரம் தொகுதியில் பன்னியன் ரவீந்திரன் போட்டியிடுகிறார்.
திருச்சூர் தொகுதியில் வி.எஸ். சுனில் குமார், மாவேலிக்கரையில் அருண் குமார் போட்டியிடவுள்ளனர். இந்தத் தொகுதிகளில் வயநாடு எம்.பியாக தற்போது இருப்பவர் ராகுல் காந்தி. அதேபோல திருவனந்தபுரம் எம்.பியா இருப்பவர் சசிதரூர் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"மாஸ்டர்" கே.கே.ஷைலஜா

கொரோனா கால கட்டத்தின்போது கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஷைலஜா. முன்னாள் ஆசிரியையான இவர், சுகாதாரத் துறை அமைச்சராக நாடே போற்றும் வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவரது திறமையான செயல்பாடுகளாலும், அயராத உழைப்பாலும் கேரள மாநிலம் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மிக சிறப்பாக மீண்டது என்பது நினைவிருக்கலாம். ஷைலஜாவின் செயல்பாடுகள் பலரது பாராட்டுக்களையும் பெற்றது.
இந்த நிலையில் தற்போது ஷைலஜாவை எம்.பியாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக அவரை வடகரா தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. இக்கட்சியின் வேட்பாளர்கள் விவரம்:
நடிகர் முகேஷுக்கும் சீட்

ஆலப்புழா - ஏ.எம். ஆரீப்.
ஆலத்தூர் - கே.ராதாகிருஷ்ணன்.
ஆட்டிங்கல் - வி.ஜாய்
சாலக்குடி - பேராசிரியர் சி. ரவீந்திரநாத்.
எர்ணாகுளம் - கே.ஜி.ஷைனி
இடுக்கி - ஜாய்ஸ் ஜார்ஜ்
கண்ணூர் - எம்.வி.ஜெயராஜன்
காசர்கோடு - எம்.வி.பாலகிருஷ்ணன்
கொல்லம் - நடிகர் முகேஷ்
கோழிக்கோடு - எலமரம் கரீம்
மலப்புரம் - வி.வசீப்
பாலக்காடு - ஏ.விஜயராகவன்
பத்தனம்திட்டா - தாமஸ் ஐசக்
பொன்னானி - கே.எஸ்.ஹம்சா
வடகரா - கே.கே.ஷைலஜா
20வது தொகுதியான கோட்டயம் லோக்சபா தொகுதியில் கூட்டணிக் கட்சியான கேரளா காங்கிரஸ் (எம்) சார்பில் தாமஸ் சழிக்கடன் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து விட்ட இடதுசாரி கூட்டணி தனது பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டது.
கேரளாவில் இந்தியா கூட்டணி கிடையாது

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸுடன் இடதுசாரிகளும் இணைந்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இணைந்து போட்டியிடுகின்றனர். ஆனால் கேரளாவில் இவர்கள் எப்போதுமே எதிரும் புதிருமாகத்தான் நிற்பார்கள். காங்கிரஸ் தலைமையில் அங்கு ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்டிசியும் கேரளாவில் எதிரும் புதிருமாக மோதுவது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராகுல் காந்தி போட்டியிட்டு வென்ற வயநாட்டில் வலுவான வேட்பாளராக சிபிஐ அறிவித்துள்ளதும் பலரை ஏற்கனவே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}