சென்னை : தமிழ்நாட்டில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமானது. அந்த வகையில் தற்போது சில முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்துள்ளது. மருத்துவத்துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக இடமாற்றம் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விபரம் :

* சுற்றுலாத்துறை, இந்து அறநிலையத்துறை செயலாளர் - சந்திரமோகன்
* நெடுஞ்சாலைத்துறை செயலாளர் - செல்வராஜ்
* மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் - சுப்ரியா சாகு
* கூடுதல் தலைமைச் செயலாளர் பொதுப்பணித்துறை - மங்கத் ராம் சர்மா
* நீர்வளத்துறை செயலாளர் - மணி வாசன்
* உயர்கல்வித்துறை செயலாளர் - பிரதீப் யாதவ்
* ஊரக வளர்ச்சி துறை செயலாளர் - ககன் தீப் சிங் பேடி
* சுற்றுச்சூழல் துறை செயலாளர் - செந்தில் குமார்
* சமூக பாதுகாப்பு இயக்குனர் - ஜான் லூயிஸ்
* இந்திய மருந்து கழக இயக்குனர் - விஜயலட்சுமி
* வரலாற்று ஆய்வுத்துறை கமிஷனர் - வெங்கடாசலம்
* நில சீரமைப்பு துறை கமிஷனர் - ஹரிஹரன்
* போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் - லில்லி
இடமாற்றங்களையும், புதிய நியமனங்களையும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}