நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்

Feb 11, 2026,05:12 PM IST
புதுடெல்லி: முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய புத்தகம் தொடர்பான சர்ச்சைகள் இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகளை விமர்சித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய புத்தகம் ஒன்றில் பாதுகாப்பு துறை சார்ந்த முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த புத்தகத்தை வெளியிட மத்திய பாதுகாப்புத்துறை அனுமதி வழங்கவில்லை. அந்த புத்தகத்தின் ஒரு பிரதி கூட அச்சிடப்படவோ அல்லது டிஜிட்டல் வடிவமாகவோ வெளியிடப்படவில்லை என அந்த புத்தகத்தை அச்சிட்டு, வெளியிடும் காப்புரிமம் பெற்ற நிறுவனம் கூறுகிறது. ஆனால் அந்த புத்தகத்தை கையில் வைத்துள்ள ராகுல் காந்தி, அதில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் குறித்து மத்திய அரசை கேள்வி கேட்டு வருகிறார். 



ஒரு பிரதி கூட அச்சிடப்படாத ஒரு புத்தகம் எப்படி ராகுல் காந்திக்கு கிடைத்தது என மத்திய பாதுகாப்புத்துறை கேள்வி எழுப்பி வருகிறது. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான ஒரு விஷயத்தை, ராகுல் காந்தி தனது சுய லாபத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் தவறான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். தேசப் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ராணுவ மற்றும் அரசாங்க ரீதியிலான ரகசியங்கள் குறித்து பேசிய ரிஜிஜு, ராணுவ தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான உரையாடல்கள், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு இடையிலான ரகசியத் தொடர்புகள், இவை அனைத்தும் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டால், நாட்டின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய ரகசியத் தகவல்களை அரசியல் மேடைகளுக்கு இழுப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உகந்ததல்ல என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி தொடர்ந்து நாடாளுமன்ற மரபுகளை மீறி வருவதாகவும், சபையின் மாண்பைக் காக்க வேண்டிய சபாநாயகரை அவமதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் அமைச்சர் சாடியுள்ளார். சபாநாயகரை அவமதிப்பது ஜனநாயக முறைப்படி துரதிர்ஷ்டவசமானது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகக் குறிப்புகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த காட்டமான பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்