சென்னை : பெருமாளின் தசாவதாரங்களில் எட்டாவது அவதாரமாக போற்றப்படுவது கிருஷ்ண அவதாரம் ஆகும். கிருஷ்ணர் அவதரித்த தினத்தையே நாம் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடுகிறோம். கிருஷ்ணர், ஆவணி மாத தேய்பிறையில் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில், நள்ளிரவு நேரத்தில், சிறைச்சாலையில் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை மாலை துவங்கி, இரவு வரை மக்கள் கொண்டாடும் வழக்கம் வைத்துள்ளார்கள்.
கிருஷ்ண ஜெயந்தியை, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ரோகிணி ஜெயந்தி என பலவிதமான பெயர்களில் கொண்டாடுகிறோம். பலரும் இவை அனைத்தும் ஒன்று தான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் மக்கள் தாங்கள் பின்பற்றி, கிருஷ்ணரின் அவதார தினத்தை கொண்டாடும் வழக்கத்தை குறிப்பதாகும். அதாவது, கிருஷ்ணர் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு சில வருடங்கள் தவிர மற்ற ஆண்டுகளில் இரண்டும் வேறு வேறு நாட்களிலேயே வரும். அதனால் வீடுகளில் அஷ்டமி திதியை கணக்கில் வைத்தும், கோவில்களில் ரோகிணி நட்சத்திரத்தை கணக்கில் வைத்தும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவார்கள். அஷ்டமி திதியை அடிப்படையாக கொண்டாடுபவர்கள் கோகுலாஷ்டமி என்றும், ரோகிணி நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்று காலை 09.12 மணிக்கு பிறகு தான் அஷ்டமி திதி துவங்குகிறது. ஆனால் ரோகிணி நட்சத்திரம் இரவு 09.41 மணிக்கு தான் துவங்குகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி இரவு வரை ரோகிணி நட்சத்திரம் உள்ளது. இதனால் அவரவர்களின் முறைப்படி ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரண்டு நாட்களுமே கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடலாம். ஆகஸ்ட் 26ம் தேதி முருகப் பெருமானுக்குரிய கார்த்திகை நட்சத்திரம், பைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி, சிவ பெருமானுக்குரிய திங்கட்கிழமை ஆகிய அனைத்தும் இணைந்து வருகிறது மற்றொரு தனிச்சிறப்பாகும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள கண்ணனின் படம் அல்லது சிலைக்கு அழகாக அலங்காரம் செய்ய வேண்டும். வீட்டின் வாசல் துவங்கி, பூஜை அறை வரை அரிசி மாவினால் குழந்தை கிருஷ்ணரின் பாதங்களை வரைய வேண்டும். கிருஷ்ணருக்கு பிரியமான முறுக்கு, சீடை, லட்டு, அதிரசம், வெண்ணெய், அவல் உள்ளிட்ட பல விதமான பலகாரங்களை நைவேத்தியங்களாக செய்து படைக்க வேண்டும். எதுவும் முடியாதவர்கள் வெறும் வெண்ணெய் மட்டும் வைத்து வழிபடலாம். அதவும் முடியவில்லை என்றால் பால் மட்டும் வைத்து வழிபடலாம்.
வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த நாளில் கிருஷ்ணர், ராதை போல் வேடமணிந்து அவர்களை கிருஷ்ணராக பாவித்து உபசரித்து வழிபடுவதும் வழக்கம். குழந்தை வரம் வேண்டுபவர்கள், விரதம் இருந்து தவழும் குழந்தை கிருஷ்ணரின் வடிவத்தை வழிபட்டு, கண்ணனுக்கு நைவேத்தியமாக படைத்த வெண்ணெய்யை காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது இரவு தூங்க செல்வதற்க முன்பாகவோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}