குரோதி தமிழ் வருட ராசிபலன் 2024 : எப்போதும் துருதுருவென செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!

Apr 04, 2024,08:36 AM IST

எப்போதும் துருதுருவென செயல்படும் மேஷ ராசி அன்பர்களே…!


பிறக்க போகின்ற குரோதி வருடத்தில் குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சில உதவிகளும் கிடைக்கும். பண வரவுகள் தேவைக்கு ஏற்ப சாதகமாக இருக்கும். சேமிப்பு குறித்த செயல்களில் கவனத்துடன் இருக்கவும். மனதளவில் சிறு சிறு சலனங்கள் தோன்றி மறையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். நேர்முக மற்றும் மறைமுக எதிர்ப்புகளை புரிந்து செயல்படுவீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். மனை வாங்கும் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புனித யாத்திரை குறித்த எண்ணம் மேம்படும். உறவுகள் இடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும்.




பெண்களுக்கு:


பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பரமான செலவுகளை தவிர்ப்பது நெருக்கடிகளை குறைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலையிடாதிருப்பது நல்லது. தனிப்பட்ட சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ரகசியம் வேண்டும். மனதிற்கு நெருக்கமானவர்கள் மூலம் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிதல்கள் உண்டாகும். 


மாணவர்களுக்கு:


புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். ஆசிரியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாகன பயணத்தில் மிதவேகம் மிக நன்று. விளையாட்டுப் போட்டிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உயர்நிலை கல்வியில் சில புரிதல்களும் மறைமுகமான விரயமும் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும்.


வியாபாரிகளுக்கு:


 தொழிலில் இருந்த போட்டிகளைச் சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் அலைச்சலுக்குப் பின்னரே சாதகமாகும். புதுமையான செயல்களில் தக்க ஆலோசனை பெற்று ஈடுபடவும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வேலையாட்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும். கூட்டாளிகளிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். இழுபறியாக இருந்து வந்த வசூல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

 உத்தியோகஸ்தர்களுக்கு:


நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மற்றவர்களை நம்பி வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகளுக்கான முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வேலைகள் சம்பந்தப்பட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்புகள் கிடைக்கும். விவசாய உபகரணங்களை பழுது நீக்கி சீர் செய்வது தாமதத்தை குறைக்கும். நீர் வரத்தினை அறிந்து பயிரினை தேர்வு செய்யவும்.

 அரசியல்வாதிகளுக்கு:


வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நேர்மைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். அதிகாரமான பேச்சுக்களை சூழ்நிலை அறிந்து பயன்படுத்தவும். தொண்டர்களின் ஆதரவால் நினைத்த சில பணிகளை முடிப்பீர்கள்.


கலைஞர்களுக்கு:


புதிய முயற்சிகள் ஈடேறும். பொருளாதார உயர்வு குறித்த சிந்தனைகள் மேம்படும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் அமையும். தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும். அவ்வப்போது உங்களை பற்றிய கிசுகிசுகள் தோன்றி மறையும். பயணங்களால் உடல் அசதிகள் தோன்றி மறையும். 


வழிபாடு:


புதன்கிழமை தோறும் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர செயல்களில் இருந்த தடைகள் மற்றும் தாமதங்கள் நீங்கும்.


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்