டெல்லி: டெல்லியில், லிவ் இன் பார்ட்னரின் 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 29 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் மீது பலாத்காரம் உள்ளிட்ட2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டமும் அவர் மீது பாய்ந்துள்ளது.
அந்த நபரின் பெயர் அங்கித் யாதவ். பஸ் டிரைவர். 29 வயதான இவர் காஸியாபாத்தைச் சேர்ந்தவர். ஒரு பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருந்து வந்தார். அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர். எட்டு வருடத்திற்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டனர். அப்பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

தனது குழந்தைகளுடன், அங்கித் யாதவுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வசித்து வந்தார் அப்பெண். இந்த நிலையில்தான் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், அப்பெண்ணின் 14 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் அங்கித் யாதவ்.
ஜூலை 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது சிறுமியின் தாயார் மருத்துவமனைக்குப் போயிருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு பலாத்காரம் செய்துள்ளார் அங்கித் யாதவ். இதை வெளியில் சொல்லக் கூடாது என்று கூறி மிரட்டி மேலும் சில முறையும் கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.
ஆனால் அந்த சிறுமி பின்னர் தனது தாயாரிடம் நடந்ததைச் சொல்ல அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் உடனடியாக செயல்பட்டு அங்கித் யாதவைக் கைது செய்தனர்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}