சென்னை: சென்னையை அடுத்துள்ள ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டிரைவர் தூங்கி விட்டதால் ரயில் நிற்காமல் போய் தடம் புரண்டதாக தெரிய வந்துள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்தும், கடற்கரையில் இருந்தும் நாள்தோறும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தடம் புரண்ட பகுதியில் ரயில்கள் இயக்க முடியாததால் வந்தேபாரத் உள்பட பல்வேறு ரயில்களும் தாமதமாகியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம்அண்ணூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதினால் சில மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வந்தே பாரத், சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் ரயில்கள் அனைத்தும் தாமதமாகவே பயணித்தது. விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. மின்சார ரயில் தடம் புரண்டது தொடர்பாக, ரயில்வே துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ரயில் ஓட்டுனரின் அஜாக்கிரதை தான் விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அவர் கண் அசந்து சற்று தூங்கி விட்டதால் விபத்து நேரிட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் ரயில் தடம் புரண்ட பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை என்பதால் மக்கள் அங்கும் இங்குமாக பயணித்து வரும் வேலையில் இந்த சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். ரயில் தடம் புரண்டுள்ளதால் அப்பகுதியில் பயணிக்கும் அனைத்து ரயில்களும் தாமதமாக செயல்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}