- மு. பாரதி
வீட்டில்
பெற்றோரின்
ஆட்சி
பள்ளியில்
மாணவச் செல்வங்களின்
ஆட்சி
தேர்வில்
வினாக்களின்
ஆட்சி
மைதானத்தில்
பந்துகளின்
ஆட்சி
சோலையில் மரங்களின்
ஆட்சி
மரங்களில்
பூக்களின்
ஆட்சி

வானவில்லில்
ஏழு வண்ணங்களின்
ஆட்சி
கடலில்
கப்பலின்
ஆட்சி
மேகக் கூட்டத்தில்
விமானங்களின்
ஆட்சி
மலைகளில்
இயற்கையின்
ஆட்சி
கவிதையில்
சொற்களின்
ஆட்சி
பாடல்களில்
இசையின்
ஆட்சி
காட்டில்
சிங்கத்தின்
ஆட்சி
அனைவரிடமும்
கைப்பேசியின்
ஆட்சி
குடும்பத்தில்
அன்பின்
ஆட்சி
கல்லூரியில்
நட்பின்
ஆட்சி
உலகை
அன்பால்
ஆட்சி செய்வோம்
அகிம்சையால்
ஆட்சி செய்வோம்
சகோதரத்துவத்தால்
ஆட்சி செய்வோம்
இரக்கத்தால்
ஆட்சி செய்வோம்
எதிரிகளையும்
அன்பால்
அரவணைத்து
அனைவருடைய
உள்ளத்திலும்
ஆட்சி
செய்வோம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் ,சென்னை -64)
காங்கேயம் காளைகளின் கம்பீரம்.. நாட்டு மாட்டுப் பால்.. கொங்கு நாட்டின் பெருமைகள்!
இதயம் நுழைந்து சிறு சிறு தூறலாக மடல் நிறைந்து வழிந்தோடி!
செல்ல இடியுடன் வா!
கண்ணன் சிரிக்கிறான்!
Nothing destroys you faster than your own mind
படிக்கப்படாத என் கடிதம்!
The Secret Stranger
மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பீரமும் - தாலாட்டும் ஞாபகங்களும்!
Felt that the rainbow hand
{{comments.comment}}