- தெ.நாராயண லெட்சுமி, B.E
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பு வரை, குழந்தைகளை தனியாக வெளியில் அனுப்புவதற்கு பல பெற்றோர்கள் பயப்பட்டனர். சிலர் “தனியாக சென்று கற்றுக்கொள்ள வேண்டும்” என்று உறுதியாக இருந்தாலும், பலர் பாதுகாப்பு காரணமாக அதிக கவனத்துடன் இருந்தனர்.
இன்று காலம் மாறியுள்ளது. கல்வி, வேலை, போக்குவரத்து என அனைத்தும் விரைவாக நகரும் சூழலில், குழந்தைகள் சிறு வயதிலேயே சுயநிறைவு பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பாதுகாப்பு குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.
சில பெற்றோர் தற்போது தங்கள் குழந்தைகளை பொறுப்புடன் வெளியில் அனுப்பி பழக்கப்படுத்துகிறார்கள். உதாரணமாக, பள்ளி தூரமாக இருக்கும் குழந்தைகளை நம்பகமான டாக்ஸி சேவையில் குழுவாக அனுப்புவது, அருகிலுள்ள குழந்தைகளை தனியாக செல்ல பழக்கப்படுத்துவது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் குழந்தைகள் சுயநம்பிக்கை மற்றும் அனுபவம் பெறுகிறார்கள்.

“குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்ப்பதை விட, உலகத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பை அளிக்க வேண்டும். அதே சமயம் பாதுகாப்பும் முக்கியம்” என்பது பல பெற்றோரின் புதிய சிந்தனையாக மாறியுள்ளது.
இன்றைய பெற்றோரின் சவால் என்பது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதோடு மட்டுமல்ல, அவர்களை சுயமாக வாழத் தயார்படுத்துவதும் ஆகும். வாழ்க்கையின் அனுபவங்களை நேரடியாக சந்தித்தால்தான் குழந்தைகள் எதிர்காலத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும் என்பதே பலரின் கருத்தாகும்.
சமநிலை தான் முக்கியம் — பாதுகாப்பும், சுயநிறைவும் சேர்ந்த வளர்ப்பு தான் இன்றைய காலத்தின் தேவையாகிறது.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}