- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
வாங்க தெரிந்து கொள்வோம்.
சிறிய தொடக்கமே பெரிய வெற்றியைத் தரும் என்பதைப் போல் ஒவ்வொரு மாணவரின் தொடக்க கல்வி ஒரு மாணவரின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல அடித்தளமாக இருக்கிறது என்பது முற்றிலும் உண்மையாகும்.
இப்படி சிறப்பான தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தினமும் சிரித்து விளையாடிக்கொண்டே
பாடத்தை படித்தும், பொது அறிவு தகவலை தெரிந்து கொண்டும், பல்வேறு விளையாட்டுகளை கற்றுக் கொண்டதற்கு அடிப்படை தொடக்கப் பள்ளிக்கூடம் ஆகும்.
நண்பர்களுடன் கற்கும் போது கற்றலை வேடிக்கையாக கற்றுக்கொள்ளும் பருவம் தொடக்கப்பள்ளி பருவமாகும் . தொடக்கப் பள்ளி மாணவர்களின் நிறைவு நாளை ஒவ்வொரு பெற்றோர்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

சிறிய குழந்தைகள் என்பதால் அவர்களாக சிந்தித்து சிறப்பாக செயல்பட முடியாது. பெற்றோர்களின் வழிகாட்டுதல் மூலம் தங்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஏற்படுத்தி கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களுக்கு தங்களால் முடிந்த நினைவு பரிசை அவர்களால் முடிந்த கைவினைப் பொருட்களைக் கொண்டு செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
பாராட்டு விழா என்றால் நாம் பணம் செலவு செய்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. மன நிறைவோடு சிறிய பொருளை அன்பளிப்பாக கொடுத்து , எங்களுக்கு நல்ல கல்வியை கற்றுக் கொடுத்ததற்கும் நன்றி கூறி ,நான் எதிர்காலத்தில் சிறந்த மாணவனாக செயல்படுவேன் என்று உறுதிமொழி அளிப்பது ஒவ்வொரு மாணவரின் கடமை என்பதை உணர்த்த வேண்டும்.
ஒரு மாணவன் உயர்ந்த நிலையில் வந்த பிறகு தனது வெற்றிக்கு காரணமாக இருந்தவர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் என்று பெருமையாக கூறுவதை உணர முடியும்.
இதனை குழந்தைகளால் இப்பொழுது புரிந்து கொள்ள முடியாது. காலம் கடந்த பிறகு இதனை அனுபவத்தால் உணர்ந்து பார்ப்பார்கள். பள்ளியின் நிறைவு நாளில் அனைத்து மாணவர்களுடனும், ஆசிரியருடனும் குரூப்பாக புகைப்படங்கள் எடுத்துக்கொள்வோம்.
நாம் உயர் கல்வியை படிக்கும் போதும், உயர்ந்த நிலைக்கு வந்த பிறகும் நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த முன்னாள் ஆசிரியரை சந்தித்து அவர்களிடம் வாழ்த்துகள் பெற கற்றுக்கொடுப்போம். தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் எடுத்த புகைப்படத்தை லேமினேஷன் செய்து வைத்துக் கொள்ளலாம். அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கைப்பேசி எண்ணை சேமித்து வைத்துக் கொண்டு தேவையான பொழுது பேசிக் கொள்ளலாம் .
ஆரம்பப்பள்ளி மாணவர்களின் நட்பை தொடர்ந்து பயணிக்கலாம். நாம் படித்த பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழா போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள முயற்சி செய்யலாம்.
ஐந்தாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு விடுமுறை நாளில் அவர்கள் பள்ளியில் எப்படி இருந்தார்கள் என்பதை பற்றி டைரியில் எழுதி வைக்க சொல்லலாம். இந்த டைரியை அவர்கள் பல வருடங்கள் கழித்து பார்க்கும் பொழுது அது ஒரு பொக்கிஷமாக அவர்களுக்கு இருக்கும்.
நீங்களும் உங்களுக்கு தெரிந்த புதிய வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படுங்கள். பிரிவு என்பது நிரந்தரம் இல்லை. மீண்டும் மீண்டும் சந்திப்போம் என்று விடை கூறி பள்ளியை விட்டு பிரிந்து செல்வோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
{{comments.comment}}