மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Sep 09, 2026,01:11 PM IST

சென்னை : மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பினை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக.,வின் மரகதம் குமாரவேலு மற்றும் தாராபுரம் தொகுதியில் அதிமுக.,வை சேர்ந்த சத்யபாமா ஆகிய இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால் எம்எல்ஏ.,வாக பதவியேற்ற சில நாட்களிலேயே தங்களின் எம்எல்ஏ., பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்தனர். இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்ததால், இடைத்தேர்தல் தள்ளிப் போனது.


இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதியை தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. இதன்படி இந்த தனித் தொகுதிகளுக்கும் அக்டோபர் 06ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 09ம் தேதியான இன்று துவங்கி, செப்டம்பர் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் செப்டம்பர் 17ம் தேதியன்று பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 19ம் தேதியாகும். அக்டோபர் 06ம் தேதியன்று பதிவாகும் ஓட்டுக்கள் அக்டோபர் 09ம் தேதியன்று எண்ணப்பட உள்ளன. 




இதற்கிடையில் திமுக வேட்பாளர் தேர்வு குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் திமுக வழக்கறிஞர் சுகன்யா என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 


இவர்களில் மதுராந்தம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ., ஆனவர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் இவருக்கு எழும்பூர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில், தற்போது அமைச்சராக இருக்கும் ராஜ்மோகனிடம் பரந்தாமன் வெற்றி வாய்ப்பை இழந்தார். 


இரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை முதல் ஆளாக திமுக அறிவித்துள்ளதில் இருந்தே, இந்த தேர்தலை அக்கட்சி எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதை காட்டுகிறது. இதனால் தவெக.,விற்கு கடும் போட்டியாக இருப்பதற்கான தேர்தல் யுக்திகளை திமுக வகுக்கும் என எதிர்பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"

news

சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த மாஸான கோவில்.. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில்!

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026...வேட்புமனு தாக்கல் துவங்கியது...யாருக்கு வெற்றி?

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

தொடுதிரையில் தொலைந்த நட்பு!

news

காத்திருப்பும் அழகானதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்