சென்னை : இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் செப்டம்பர் 09ம் தேதியான இன்று வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது. இடைத்தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக.,வின் மரகதம் குமாரவேலு மற்றும் தாராபுரம் தொகுதியில் அதிமுக.,வை சேர்ந்த சத்யபாமா ஆகிய இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால் எம்எல்ஏ.,வாக பதவியேற்ற சில நாட்களிலேயே தங்களின் எம்எல்ஏ., பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்தனர். இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்ததால், இடைத்தேர்தல் தள்ளிப் போனது.
வேட்புமனு தாக்கல் துவக்கம் :

இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதியை தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. இதன்படி இந்த தனித் தொகுதிகளுக்கும் அக்டோபர் 06ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 09ம் தேதியான இன்று துவங்கி, செப்டம்பர் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் செப்டம்பர் 17ம் தேதியன்று பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 19ம் தேதியாகும். அக்டோபர் 06ம் தேதியன்று பதிவாகும் ஓட்டுக்கள் அக்டோபர் 09ம் தேதியன்று எண்ணப்பட உள்ளன.
வாழ்வா சாவா தேர்தல் :
இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளுமே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள். அதனால் அதிமுக தனது பலத்தை காட்ட, இழந்த எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கையை மீண்டும் பெறுவதற்காக இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. அதிமுக.,வில் நிலவி வரும் உட்கட்சி பூசல், அதிருப்தி மனநிலைகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வர இந்த தேர்தல் நிச்சயம் அக்கட்சிக்கு கை கொடுக்கும். அதே சமயம் ஆளும் கட்சியான தவெக, சட்டசபையில் தங்களுக்கான பெரும்பான்மையை பெறுவதற்கு வேண்டிய எம்எல்ஏ.,க்களை பெற வேண்டும் என்பதால் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 அமைச்சர்கள் என்ற வீதத்தில் தேர்தல் பணிகளை செய்வதற்காக அமைச்சர் குழுக்களை நியமித்துள்ளது.
திமுக.,விற்கு இருக்கும் சிக்கல் :
மற்றொரு புறம் கடந்த 4 மாத தவெக ஆட்சியில் இருக்கும் நிர்வாக சீர்கேடுகள், ஓட்டைகள் ஆகியவற்றை பிரச்சார யுக்தியாக கையாண்டு, தவெக அரசு மீது மக்களின் அதிருப்தியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த இடைத்தேர்தலை பயன்படுத்த திமுக.,வும் தீவிரமாக முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. அதை விட மிக முக்கியமான விஷயம், சட்டசபை தேர்தலின் போது இருந்த நிலைமை தற்போது கிடையாது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல கட்சிகள், தற்போது தவெக தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகின்றன. அதனால் இடைத்தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும் நிலையே உள்ளது.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026...வேட்புமனு தாக்கல் துவங்கியது...யாருக்கு வெற்றி?
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
தொடுதிரையில் தொலைந்த நட்பு!
காத்திருப்பும் அழகானதே!
பட்டுச் சட்டை போட்ட மச்சான்!
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
{{comments.comment}}