முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

Sep 08, 2026,10:31 AM IST

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் விஜய் பேசியதற்கு திமுக எம்எல்ஏ.,க்கள் இன்று காலை அவை கூடியது முதல் அமளி செய்து வந்தனர். முதல்வர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கும் படி வலியுறுத்தினர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதை அடுத்து, அவர்கள் அவை காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.


எ.வ.வேலு கோரிக்கை மற்றும் முதலமைச்சரின் பேச்சு :


நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உரையாற்றிய போது சர்க்காரியா கமிஷன் குறித்து தெரிவித்த கருத்துக்கள் காரசாரமான விவாதத்திற்கு வழிவகுத்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு, "சர்க்காரியா கமிஷனில் சொல்லப்பட்ட 28 குற்றச்சாட்டுகள் எந்த விதத்திலும் நிரூபிக்கப்படவில்லை. அதனால் வழக்கு தொடர முடியாது எனத் தான் சர்க்காரியா கமிஷன் முடித்து வைக்கப்பட்டது. இந்நிலைப்பாட்டில் சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.


சபாநாயகரின் முடிவும் திமுகவின் தர்ணாவும் : 




முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, சபாநாயகரின் இருக்கைக்கு முன்பாக திரண்டு சூழ்ந்து கொண்ட திமுகவினர், அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு தொடர் முழக்கங்களையும் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், "கொறடாவுக்கு பேச அனுமதி அளிக்கிறேன். அனைவரும் சென்று தங்கள் இருக்கையில் அமருங்கள்" என்று எச்சரிக்கை விடுத்தார்.


வலுக்கட்டாயமாக வெளியேற்றம் : 


சபாநாயகரின் எச்சரிக்கையையும் மீறி திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியிலும், முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, அவையின் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, தர்ணாவில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உத்தரவிட்டார். உடனடியாக உள்ளே வந்த அவை காவலர்கள், பேரவைத் தலைவரை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் சிலரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக அவையை விட்டு வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் சட்டமன்ற வளாகத்தில் பெருத்த பரபரப்பு நிலவியது.


சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று 8 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இதனால் இன்றும் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாகவும், பகல் 01.30 மணிக்குள்ளாக அவையை நிறைவு செய்வதற்காக அனைத்து உறுப்பினர்களும் சுருக்கமாக பேச வேண்டும் என நேற்றே சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

அதிகம் பார்க்கும் செய்திகள்