பட்டுச் சட்டை போட்ட மச்சான்!

Sep 09, 2026,10:14 AM IST

- ரா. பிருந்தா ஜெயந்தி, நெய்வேலி


பட்டு சட்ட போட்ட மச்சான் 

பவிசா தான் இருக்காரு.....

பக்கத்துல நா இருக்க  

பாவி மனசு துடிக்குதுங்க .....


பஞ்சாங்கத்த பாத்து

பரிசத்த போட்டு,

பத்திரிக்கைய பாங்கா அடிச்சி,

பங்காளிய அழச்சு,

பந்தக் காலும் நட்டு,

பாந்தமா தான் தாலிய கட்டி,

பந்தமா ஆகும் நாளும் 

எந்நாளோ.....




முத்தமிழ் முருகன் அருளால.....

குறை இல்லாம 

குறி கேக்க,

பொருத்தத்தைப் பார்க்கச் சொல்லி, 

என்னைப் பெத்த ராசாவ

பொறுப்போட அனுப்பி வச்சேன்.....


இந்த மச்சான் பொருத்தமுன்னா, 

எங் குல சாமிக்கு

குலவ விட்டு, பொங்க வைக்க நேந்துக்கிட்டேன்......


குல சாமியும் 

மச்சானை பொருத்தமா என்னோட சேத்து வச்சி 

ஊரும் உறவும் கூடி

மனம் குளிர 

குலம் தழைக்க வாழ்த்துறைச்சு

கல்யாணமும் முடிச்சி வச்சி 

குடுத்தனமும் சேர்த்து வச்சி 

குதூகலமாய் வாழறோம்......


நேர்ந்தாற் போல 

குல சாமிக்கு 

பொங்க வச்சி 

கும்பிட்டு

குதூகலமா வாழறோமே.....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

தொடுதிரையில் தொலைந்த நட்பு!

news

காத்திருப்பும் அழகானதே!

news

பட்டுச் சட்டை போட்ட மச்சான்!

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

அதிகம் பார்க்கும் செய்திகள்