- கவிதாயினி டாக்டர் எஸ்.மணிமேகலை
வந்தாரை உபசரிக்கும் வரமான பண்பாடே
சொந்தமென உறவாடும் சொர்க்கத் தாய்நாடே
செந்தாமரையாய் மலர்ந்திடும் செழிப்பான பாரதமே
அந்தி வேளையிலும் அழகூட்டும் சென்னை மாநகரமே
வண்ண ஒளியில் மின்னிடும் வள்ளுவர் கோட்டம்
படிகள் பல ஏறினால் வள்ளுவர் தரிசனம்
அழகான வண்ண மலர் நிறைந்த தோட்டம்
அம்பாரியாய் உயர்ந்து நிற்கும் கோட்டம்
கல்வெட்டில் பொறிக்கப்பட்ட கனிவான திருக்குறள்
பளிங்கு கற்களில் பதிக்கப்பட்ட முப்பால் குறள்

சீரிய கருத்தை நெஞ்சில் நிறைந்திடும் கோட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்தின் உயரிய கோட்டம்
செழிப்பான சிந்தனை வளர்க்கும் வள்ளுவர் கோட்டம்!
(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் மணிமா என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
The Secret Stranger
மேற்கு தொடர்ச்சி மலையின் கம்பீரமும் - தாலாட்டும் ஞாபகங்களும்!
Felt that the rainbow hand
செழிப்பான சிந்தனை வளர்க்கும் வள்ளுவர் கோட்டம்!
Don’t search for yourself, create yourself
முப்பது வருடங்களுக்கு முன் நடந்தது என்ன? - அவள் யாரென்று தெரியுமா? -(தொடர்கதை அத்தியாயம் 2)
Patience and Kindness
வெள்ளை நஞ்சு!
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் 2026: அன்ன வடிவில் ஈசன் அகிலம் காக்கும் ஈசன்!
{{comments.comment}}