எங்க ஊரு மாரியம்மா.. மதுரை மாநகர மக்களுக்கு.. கேட்டதெல்லாம் அருளும் ரிசர்வ் லைன் மாரியம்மன்!

Aug 21, 2024,01:59 PM IST
மதுரை: தமிழ்நாடு போன்ற ஒரு ஆன்மீக மாநிலத்தை வேறு எங்குமே பார்க்க முடியாது. இங்குதான் தெருவுக்குத் தெரு கோவில் உண்டு. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு உண்டு.. மாதந்தோறும் விழாக்கள்தான், விமரிசையான பக்தியை இங்கு மட்டுமே பார்க்க முடியும்.

அதிலும் மதுரையை கோவில் மாநகரம் என்றே சொல்வார்கள். மீனாட்சி அம்மனுக்கு மட்டுமல்ல வேறு பல கோவில்களுக்கும் பிரபலமானது மதுரை. வண்டியூர் மாரியம்மன் கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் என திசைக்கு ஒரு கோவில் என திகட்டத் திகட்ட பக்தியில் மூழ்கித் திளைப்பவர்கள் மதுரை மக்கள். அந்த வகையில் இன்னும் ஒரு முக்கியமான கோவில்தான் ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில்.

மதுரை ரிசர்வ் லைன் போலீஸ் குடியிருப்புக்கு மத்தியில் இருக்கும் கோவில்தான் இந்த ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில். இந்தக் கோவில் நிறுவப்பட்ட காலம் தெரியவில்லை. இந்த கோவிலில் உள்ள சிற்பங்கள் கோபுரம் கொடிமரம் இவற்றை வைத்து பார்க்கும் போது பற்பல வருடங்களுக்கு முன்பே இது தோன்றியிருக்கலாம் என தெரிகிறது.



தென்னிந்தியாவில் அம்மை போன்ற தொற்று நோய்கள் பரவிய காலத்தில் இந்த அம்மனுடைய தீர்த்தம் சிறந்த மருந்தாக பயன்பட்டதாக கூறுகிறார்கள். இந்தக் கோவில் பல்வேறு ஆட்சித் தலைவர்கள், அரசியல் சமுதாயத் தலைவர்கள், பக்தர்களின் ஆதரவுடன் கோவிலில் பல்வேறு ஆட்சியாளர் தலைவர்களின் பக்தர்களின் ஆதரவுடன் பல்வேறு முறை புதுப்பிக்கப்பட்டு தற்போதுள்ள நிலையில் மாறியுள்ளது. காவல்துறையின் கட்டுப்பாட்டில் இந்தக் கோவில் தற்போது நிர்வகிக்கப்படுகிறது. 

கோவில் கட்டிடக்கலை கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. கோவிலில் முதன்மை தெய்வம் மாரியம்மன், அம்மனுக்கு எல்லையம்மன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. விநாயகர், முருகன், நாகம்மாள், ஐயப்பன், முனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் போன்ற தெய்வங்களும் இக்கோவிலில் உள்ளன. 

மாரியம்மன் கோவில்களில் பெரும்பாலும் வேப்ப மரம்தான் தலவிருட்சமாக இருக்கும். இங்கும் அதுபோலவே வேப்ப மரம் தல விருட்சமாக விளங்குகிறது. நோயிலிருந்து விடுபடவும் நேர்த்திக்கடன் செலுத்தவும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். அம்மன் கோவில்களைப் பொறுத்தவரை பங்குனி, ஆடி மாதத்தில்தான் விசேஷம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ரிசர்வ் லைன் கோவிலிலும்  பங்குனி மாத திருவிழா, நவராத்திரி திருவிழா, ஆடிப்பூரத் திருவிழா விமரிசையானது.

பங்குனி மாத திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். திருவிழாவில் அம்மன் 10 நாட்களும் 10 அவதாரங்களில் கோவிலை வலம் வருவார். இன்னிசைக் கச்சேரி, திருவிழா விளையாட்டுகள், கடைகள் என பத்து நாட்களும் மிக மிக விசேஷமாக கோவில் வளாகம் காணப்படும். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பொங்கல் வைத்தல்,ஆடு கோழி பலியிடுதல். தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு வைத்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறும். நவராத்திரி திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும். விழாவின் சிறப்பம்சமாக கொலு விளங்கும்.

கொலுவில் நிறைய பொம்மைகள் வைக்கப்பட்டு தினசரி வழிபாடுகள் நடைபெறும். அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். ஆடிப்பூரத் திருவிழாவில் சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை விசேஷமானது. விழாவில் பங்கேற்கும் பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்படும்.

மதுரைக்கு வருவோர் மறக்காமல் செல்ல வேண்டிய கோவில்களில் ஒன்றாக இந்த ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரை: அனிதா, மதுரை

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்