அன்பென்றாலே அப்பா

Jun 22, 2026,04:53 PM IST

- சிவ.ஆ.மலர்விழி ராஜா


அழகான கவிதை அப்பா....

 

அடுக்கடுகாய் சுமைகள் பல வந்தாலும் 


தளராத உழைப்பினால்

தன்  நலன் பார்க்காத அப்பா....


குடும்பத்தின் வறுமையை வென்றிடவே.....


இல்லறம் துறந்து கடல் கடந்து,......


இளமை வாழ்வை இதயத்தில் மறைத்து......


தனது


இளமை வாழ்வை இதயத்தில் மறைத்து.....




உறவுகளையும்

பிரிந்து......


உறக்கத்தையும்

மறந்து...


உழைப்பே உயர்வென

உள்ளம் நெகிழ்ந்து..,....


பிள்ளைகள்  வளர்ச்சியை  

கண்ணில் காணாமல்....


கடமையை செய்தவர்

அப்பா......


உழைத்து உழைத்து

ஓடாய் தேய்ந்து....


பிள்ளைகள் வாழ்வை தோளில் சுமந்து......


சுமை தாங்கியாக

சுதந்திரம் இழந்து.....


தளரும் போதெல்லாம் 

தாங்கி பிடித்தவர் அப்பா.....


நாம்......


மனம் தளரும்

போதெல்லாம் தாங்கிப் பிடித்தவர் அப்பா....


தனக்கென  தேவையை உணர்ந்தவர் இல்லை.....


ஆடையை மனம் போல் 

அணிந்தவரில்லை.....


தன் நலன் என எதுவும் 

அறிந்ததும் இல்லை....


வலிகள்  நிறைந்து

சுமைகள்  பல தந்தாலும்.....


வயதும் கடந்து ஒடுங்கி

நின்றாலும்.......


இதயத்தில் நம்மை

சுமப்பவர் அப்பா......


தெய்வத்தை தேடி

நாம் சென்றாலும்.....


தெய்வமாக துணை

வருவதும் அப்பா.....


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

அன்பென்றாலே அப்பா

அதிகம் பார்க்கும் செய்திகள்