- மாலதி ராஜாராம்
விநாயகர் துதி
பிடி அதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே!
சிவபுராணம் தொடர்ச்சி
திருச்சிற்றம்பலம்
{பாடல் வரி, 76}
நோக்கு அரிய நோக் கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!!
விளக்கம்
உலகியலின் மீது தோன்றும் பற்று சாதாரணமானவை,, அதுவே இறைவன் மீது ஏற்பட்டால் மிக மிக நுண்மையான ஆழ்ந்து நோக்கக்கூடிய அமைதியான உணர்வாகும்,, இறைஅனுபவம் மிக நுண்மையானது, எனவே அதனைப் பற்றி அறியவோ! ருசிக்கவோ! எடுத்துக் கூறவோ முடியாது ,, அதனை நமக்கு நாமே உணர்ந்தால் மட்டுமே முடியும்
{பாடல் வரி _77 }

போக்கும்,வரவும், உணர்வும், இலாப் புண்ணியனே!!
{பொருள்}
சூரியனது தோன்றுவதும் இல்லை மறைவதும் இல்லை அது நிலையானது, அது போல் எங்கும் எந்த இடத்திலும் எல்லா பொருளிலும் நீக்கமற நிறைந்த பரம்பொருள், நம்மை விட்டு அகலவும் இல்லை நம்மை தேடி வரவும் இல்லை நம்மிடமே நிலையாக உள்ளது {புணர்வு _என்றால்} ஒன்றோடு ஒன்று ஐக்கியமாதல். கனவில் நம் உடலை விட்டு சென்ற சூட்கும உடல் விழிப்பு நிலையில் நம்முள் ஐக்கியமாகி விடுகிறது எங்கும் வியாபித்து இருக்கிற இறைவன் நம்முள் (புணர்ந்து} ஐக்கியமாகி இருக்கிறான் நீ என்னை விட்டு போகவும் இல்லை என்னுடனே இருக்கும் இறைவனே
{பாடல் வரி _78}
காக்கும் எம் காவலனே! காண்பு_ அரிய பேர்_ஒளியே!
{விளக்கம்}
நம் உலக வாழ்க்கையில் தவறி போக பல வழிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விடுத்து என்னை காப்பாற்றுவதற்கு காவலனாக இருப்பவனே! காண்பதற்கு அரிதான கண், மனம் இரண்டுக்கும் அப்பாற்பட்ட பேரொளியான இறை சொரூபமே!
{பாடல் வரி_ 79 }
ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்ற,,
{விளக்கம்
ஆற்றில் வரும் வெள்ளம் நன்மையும் செய்யும் தீமையும் விளைவிக்கும் அதுபோல பொரி புலன்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டது அது ஆற்றில் ஓடும் சாதாரண நீர் போன்றது, அதுவே இறைய அனுபவத்தில் கிடைக்கும் இன்பமானது எல்லையற்றது,ஆகவே தூய ஆற்றின் நீரைப் போன்று உள்ளவனே! அப்பா! எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளே
{பாடல் வரி _80}
தோற்றச்சுடர் ஒளியாய்! சொல்லாத நுண் உணர்வுஆய்!!
{விளக்கம்}
மாறுபடுகின்ற உள்ளத்திற்கு அப்பாற் பட்டவனாய் கதிரொளி பிழம்பாய், எவராலும் சொல்ல முடியாத அளவிற்கு இப் பிரபஞ்சம் முழுவதும் சிறியதும்,, பெரியதுமாக, பேராற்றல், படைத்ததாகவும் ஆச்சரியத்தோடு கூடிய தோற்றத்தில் தோற்றத்தில் இத்தகையது என்று கூற முடியாத நுண்மையான உணர்வை தெரிவிப்பது
{பாடல் வரி _81}
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து,அறிவு ஆம்!
{விளக்கம்}
மாறுபாடுகள் நிறைந்த இந்த உலகத்தில் வெவ்வேறு பொருளாய் காணப்பட்டு வந்து அறிவாய் வெளிப்படும் தெளிவான பரம் பொருளே!
{பாடல் வரி_ 82}
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்!
{விளக்கம்}
தெளிவானவனே என் சிந்தனையில் நின்று தெளிவு செய்பவனே,
{பாடல் வரி_ 83 }
உற்று ஆன உண்ஆர்அமுதே! உடையானே!
{விளக்கம் }
என் உள்ளத்தில் ஊற்றாக ததும்பி உண்பதற்கு திகட்டாத அமிர்தமே!
{பாடல் வரி_84}
வேற்று,விகார, விடக்கு,உடம்பின் உள் கிடப்ப
விளக்கம்
வெவ்வேறு விகாரங்களை உடைய ஊனால் ஆன உடலின்உள் கிடத்தலை நான் பொறுக்க மாட்டேன் ஐயா!
{பாடல் வரி _85}
ஆற்றேன்,"எம் ஐயா"! அரனே! ஓ!" என்று என்று
விளக்கம்
என்னுடைய அனுபவத்திற்கு இந்த உடம்பு தடையாக இருக்கிறது என் இறைவா என்று ஓ என்று வருந்தி அரட்டுகிறார்
திருச்சிற்றம்பலம்
தொடரும்
(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)
ஆளுநர் பதவி தேவையில்லை என கூறிய திமுக, அவரது அதிகாரம் பற்றி பேசுவதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
அதிமுகவில் அடுத்த புயல்: இடைத்தேர்தல் தோல்வியால் தொடரும் மூத்த தலைவர்களின் அவசர ஆலோசனை!
நன்றி மோடிஜி.. சோர்ந்து கிடந்தோம்.. இப்ப Brisk ஆயிட்டோம்.. டாக்டர் தமிழிசை ஹேப்பி!
அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வடலூர் வள்ளலார்.. நமது வரலாறே நமது அடையாளம்!
நினைத்தது நடந்ததே
A good book can change your life
I really miss you
The Fear of the Unknown
{{comments.comment}}