சென்னை: திரையுலகில் ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போது இருக்கும் என மலையாளத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இவர் தமிழுக்கும் வருவாரா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பல திறமைகளைக் கொண்டவர்கள் சினிமாவின் மீதுள்ள காதலால் தங்களின் அழகையும், நடிப்பின் திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி திரை உலகில் பயணிப்பவர்கள் பலர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தும் வருகின்றனர். சினிமாவில் சாதிக்கும் எத்தனையோ நடிகைகள் தங்களின் நடிப்பின் திறமையால் நம்மை கவரவும் தவறுவதில்லை.
அந்த வகையில் பல திறமைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கிறார் ஜிஜ்னா ராதாகிருஷ்ணன். இவர் தற்போது மலையாளத்தில் அசத்தி வரும் இளம் நடிகை ஆவார். பல்வேறு திறமைகள் உள்ளடக்கியவர். இவர் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறமை மிக்கவர்.
மே ஹூன் மூசா என்ற மலையாள படத்தில் சுரேஷ்கோபியின் மகளாக நடித்தவர். அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. மறைந்த இயக்குனர் சித்திக்கின் வழிகாட்டுதலின்படி ஜிஜ்னா நடித்த இன்னொரு படம் "போரட்டு நாடகம்". இப்படம் மே மாதம் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது அவர் சலாம் புகாரியின் உடம்பஞ்சோலோ விஷன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது.
இது மட்டுமல்லாமல் இவர் சோசியல் மீடியாவில் ஜோவியலான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் மனதை வசீகரித்து வருபவரும் கூட. பல்வேறு திறமைகளை கொண்ட இவர் தமிழிலும் ஜொலிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். காரணம், நல்ல திறமையுள்ள கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கத் தயாராக இருப்பது தமிழ் சினிமா.
"எனக்கு பிடித்த நடிகர் அமீர் கான். எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆன நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே. பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இதுதான் எனது விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்ற ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும்" என்று நம்பிக்கையாக கூறியுள்ளார் நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன்.
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
{{comments.comment}}