- மஞ்சுளா தேவி
சென்னை: மன்சூர் அலிகானின் சொந்தப் படமான "சரக்கு" திரைப்படத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத் "அவ்வையும் அதியமானும் சேர்ந்து குடிக்கலையா?" என்னும் வசனம் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஜெ ஜெயக்குமார் இயக்கத்தில் சரக்கு திரைப்படம் டிசம்பர் மாதம் வெளிவர உள்ளது. இப்படத்தில் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்துள்ளார். இவர்தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. 90களில் பயங்கரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
தற்போது டூ கே கிட்ஸ்களுக்கு பிடித்தது போல் காமெடி வில்லனாகவும் வலம் வருகிறார். வில்லன், காமெடியன், ஹீரோ, அரசியல்வாதி என திரை உலகில் முத்திரை பதித்து தனக்கென தனி நட்சத்திர பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். அவ்வப்போது ஏதாவது சர்ச்சையைக் கிளப்பவும் இவர் தவறுவதில்லை.

சரக்கு படத்தில் வலினா பிரின்ஸ் நாயகியாக நடித்துள்ளார். அமைச்சர் நாஞ்சில் சம்பத் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவி மரியா, லொள்ளு சபா முஷா, மதுமிதா, பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் என பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
தமிழ்நாட்டை பாடாய்ப்படுத்தும் மதுக் கொடுமையை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்தின் கதையை, நகைச்சுவை உணர்வுடன் உருவாக்கியுள்ளனராம். சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். அப்போது சரக்கு திரைப்படம் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கக் கூடிய படமாக இருக்கும் என கூறியிருந்தனர்.
சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து சர்ச்சை பேசியதாக , திரிஷா மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டு நாடே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதற்கு மன்சூர் அலிகான் நான் த்ரிஷா குறித்து பேசவில்லைல எனவும், கட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்கள் எனவும் கூறி வந்தார். இந்த செய்தி கடந்த ஒரு வாரமாக பேசுபொருளாக இருந்து வந்து, மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு திரைப்படத்தில் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
நீண்ட ஆயுளை பெறுவதற்காக அரசனாகிய நான் உண்பதை விட எனது நண்பர் அவ்வையார் உண்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லது என அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனியை பரிசாக அளித்தார்.இந்த செய்தியை வரலாற்றில் நாம் படித்துள்ளோம்..!
ஆனால், சரக்கு திரைப்படத்தில் "அமைச்சர்" நாஞ்சில் சம்பத் ஒரு காட்சியில் அதியமான் ஔவைக்கு சரக்கு ஊற்றி கொடுத்ததாகவும், சங்க காலத்தைத் தந்த தங்க காலத்தில் அவ்வையையும், அதியமானும் சேர்ந்து குடிக்கலையா என்றும் வசனங்களை பேசியுள்ளாராம். இதனால் பிரிவ்யூ காட்சி பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டிசம்பர் மாசம் வெளியாகும் நிலையில் உள்ள சரக்கு திரைப்படம் வெளிவந்து என்னெல்லாம் சர்ச்சையை கிளப்புமோ என பலரும் பீதியடைந்துள்ளனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}