சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணத்தால் ரிலீஸ் செய்வது தடைபட்டதால் நிறுத்தப்பட்ட சரக்கு படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யவுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான மன்சூர் அலிகான்.
ஏகப்பட்ட நடிகர் பட்டாளத்துடன் எடுக்கப்பட்ட படம் சரக்கு. மன்சூர் அலிகானின் சொந்தப் படம். யோகிபாபு, கின்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பேர் படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை டிசம்பர் 29ம் தேதி ரிலீஸ் செய்தனர். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு அந்த சமயத்தில் நேர்ந்ததால் படம் நிறுத்தப்பட்டு விட்டது.
இந்த படத்தின் சமயத்தில்தான் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கினார் மன்சூர் அலிகான். திரிஷா விவகாரம் குறுக்கிட்டது.. இதுதொடர்பான பரபரப்புகள் நிலவி. அதைத் தாண்டி படம் வெளியானது. ஆனால் விஜயகாந்த் மரணத்தால் படம் நிறுத்தப்பட்டது. இப்போது படத்தை உலக அளவில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யவுள்ளாராம் மன்சூர் அலிகான்.
உரிய நேரம் பார்த்து ரீ ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். வெளிநாடு உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம் படக் குழு.
சரக்கு படத்தின் பெயரை ஒரு மார்க்கமாக இருக்கிறது என்றால் படத்தின் வசனங்களும் கூட தாறுமாறாகத்தான் இருக்கிறது. இதனால் படம் நிச்சயம் பெரிய வரவேற்பைப் பெறும் என்று மன்சூர் அலி கான் டீம் நம்புகிறதாம்.
தடைபட்டாலும் கூட, படம் மீண்டும் ரிலீஸாகும்போது நிச்சயம் தடபுடலாக வரவேற்கப்படும் என்று செம நம்பிக்கையில் உள்ளதாம் சரக்கு டீம்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}