மறுஜென்மக் கடிதம் ('சிறுகதை)

Dec 27, 2025,10:22 AM IST

- தமிழ்மாமணி இரா.  கலைச்செல்வி


ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாரான வினோத்,  தற்செயலாக ஒரு அலுவலக நூலகத்தில் 1947-ஆம் ஆண்டில்  சுதந்திரன் என்பவன்  எழுதிய நாட்குறிப்பைக் கண்டான். "நான் உனக்காக மறுஜென்மம் எடுப்பேன், லதா" என்ற வாக்கியம் அவனை  முன் ஜென்ம நினைவுகளுக்கு சென்று,  அவனை உலுக்கியது.


ஆங்கிலேயரிடம் சுதந்திரன் பிடிபட்டு காணாமல் போனதும், லதாவின் மீது அவன் கொண்டிருந்த  தீராக் காதலும் , வினோத்தின் மனதிற்குள் நிழலாடியது. வினோத், குறிப்பில் இருந்த விவரங்களின்படி, லதாவின் பழைய வீட்டைக் கண்டுபிடித்தான். 


அங்கு, 70 வயது மதிக்கத்தக்க, அமைதியான கண்களைக் கொண்ட  அந்த லதா அமர்ந்திருந்தார். வினோத்தின் கையில் இருந்த நாட்குறிப்பைப் பார்த்த லதாவின் முகம், பிரகாசமானது. "நான் சுதந்திரன்..." என்று வினோத் கூறவில்லை. மாறாக, "லதா, உங்கள் சுதந்திரன்  ,   உங்கள் கண் முன்னே.  தெரிகிறதா எனக் கூறி நாட்குறிப்பை அவரிடம் கொடுத்தான்.




லதாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. வினோத்தின் கண்களைப் பார்த்தார். "எனக்குத் தெரியும்,. நீ மறுபிறவி எடுத்து, திரும்பி என்னை பார்க்க வருவாய் என்று என் இதயம் ஒவ்வொரு நொடியும் நம்பியது." அவள் கரங்கள், வயதின் சுருக்கங்களுடன், வினோத்தின் கைகளை அன்புடன் பற்றின. அங்கு வயது வேறுபாடு இல்லை; காத்திருந்த லதாவின் ஆத்மா, திரும்பி வந்த காதலனின் ஆத்மாவைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது.


இங்கு உடல் கவர்ச்சி இல்லை. அவன் மீது கொண்ட எல்லையில்லா அன்பு,  அவன் ஆன்மாவை மீண்டும் சந்தித்ததில்   மனநிறைவு அடைந்தது. . இருவரின் மனதும் பழைய நினைவுகளில் மூழ்கி போனது. அவர்களின் அன்புக்கு அந்த பழைய நினைவுகளே போதும்.


முற்றும்.



(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!

news

தினம் தினம் புதிய உச்சம்... இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு... தொடர் அதிர்ச்சியில் மக்கள்!

news

சென்னையில் ஒரு விழா... உணவு திருவிழா.. ஜாலியா சுத்திப் பாத்துட்டு.. வயிறு முட்ட சாப்பிடுங்க!

news

ஜன கண மன .. முதன் முதலாக தேசிய கீதம் பாடிய நாள் தெரியுமா?

news

குரு கோவிந்த் சிங் ஜெயந்தி.. பக்தி கலந்த உற்சாகத்துடன் சீக்கியர்கள் கொண்டாட்டம்

news

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்.. அறிவோம்.. உலக அதிசயங்கள்!

news

என் வலிமை!

news

கோவில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ.. கேட்டா இதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்!

news

மனைவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்