சென்னை: பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை மீதுதான் தவறு உள்ளது என்று பேசிய மயிலாடுதுறை ஆட்சித் தலைவர் மகாபாரதிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடி பள்ளிக்குச் சென்ற மூன்று வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தில் தற்போது மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை தவறாக நடந்ததாகவும், அந்தப் பையன் முகத்தில் துப்பியதாகவும், அதுதான் அந்த சம்பவத்திற்குக் காரணம் என்று கலெக்டர் மகாபாரதி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம்.
விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்? என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
யார் இந்த மகாபாரதி?
மதுரையைச் சேர்ந்தவர் கலெக்டர் மகாபாரதி. கன்பர்ட் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். பல கிலோட்டர் தொலைவுக்கு நடந்து சென்று தனது பள்ளிப்படிப்பை முடித்தவர். இவருக்கு விபத்து ஒன்றில் சிக்கி வலது கை பறி போய் விட்டது. இதனால் இடது கையால்தான் இவர் எழுதுவார். தனது ஒற்றைக் கையால்தான் அனைத்து வேலைகளையும் செய்து வருபவர்.
இவரது சிறப்பான பணிக்காக அவரைப் பாராட்டும் வகையில் கன்பர்ட் ஐஏஎஸ் அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டவர் மகாபாரதி. முதலில் திருவாரூர் கலெக்டராக செயல்பட்டார். பின்னர் கடந்த 2023ம் ஆண்டு முதல் மயிலாடுதுறை கலெக்டராக இருந்து வருகிறார்.
மிகச் சிறப்பான கலெக்டராக மயிலாடுதுறை மக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் மகாபாரதி.. அவர் ஏன் இப்படிப் பேசினார் என்பது தெரியவில்லை.
பஹல்கம் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியுடன் அதிபர் புடின் பேச்சு.. இந்தியாவுக்கு ஆதரவு!
சபரிமலை செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.. ஐயப்பனை தரிசிக்கப்போகும் முதல் ஜனாதிபதி!
செனாப் நதியின் 2 அணைகளிலிருந்து.. பாகிஸ்தான் செல்லும் தண்ணீரை.. நிறுத்தி வைத்தது இந்தியா
Gold rate: தங்கம் விலை ஸ்திரமற்றதாக இருக்கும்.. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும்..!
குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. காயத்தால் அவதிப்படும் பும்ரா.. புது வைஸ் கேப்டனாக வரப் போவது யாரு?
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!
வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!
Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!