சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அதில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
இன்று மற்றும் நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
15-12-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
16-12-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18-12-2025 மற்றும் 19-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (13-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (14-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் With ஸ்வர்ணா.. பிரியாணி என்னும் சொல் எப்படி வந்தது தெரியுமா?
சென்னைக்கு தி.நகர்னா.. தேனிக்கு எடமால் தெரு... பெருமை கொஞ்சும் தென் மேற்கு தேவதை!
என் நேரமும் வரும்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (9)
கையில் விழுந்தாய்.. கரைபுரண்டோடினாய்.. புழுதியாக மறைந்தாய்!
மயக்கமடைந்தது போல நடித்து.. நரகாசுரனை வதம் செய்த ஸ்ரீகிருஷ்ணர்!
தாமோதர மாதம்.. ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மாதம்!
Afternoon Cooking Tips: திருவாட்சி இலை சட்னி!
2000 ஆண்டுகளுக்கு முன்பே.. தூங்காமல் விழித்திருந்த மதுரை!
வாலிபக் கவி மட்டுமல்ல.. அவதாரக் கவிஞரும் கூட.. மறக்க முடியாத வாலி
{{comments.comment}}