- எம்.எல்.பிரபா
60 வயதைக் கடந்த மூத்தோர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது காசி, ராமேஸ்வரம் ஆன்மீக யாத்திரை செல்ல வேண்டும் என்பது ஒரு ஆசை. நம் முன்னோர்கள் காட்டிய ஒரு வழி. புனித கங்கையில் நீராடுவதும், சேது சமுத்திரத்தில் நீராடுவதும், பெரும் பாவங்களை போக்கி புண்ணியத்தை சேர்க்கும் என்பது நமது நம்பிக்கை.
காலம் காலமாக நமது முன்னோர்களும், மூதாதையர்களும் அதை கடைப்பிடித்து வந்துள்ளனர். அதேபோல் நாங்களும் இரண்டு வருடங்களுக்கு முன் காசிக்குச் சென்றோம். அங்கு தரிசனம் எல்லாம் நல்ல முறையில் முடித்துக் கொண்டு கங்கையிலும் நீராடி சென்னைக்கு திரும்பினோம். அடுத்ததாக ராமேஸ்வரம் செல்வதற்கு எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
பெரியோர்கள் சொல்வார்கள் "பகவான், அவரை பார்ப்பதற்கு எப்போது அழைக்கிறாரோ, அப்போதுதான் நாம் அவரை தரிசனம் செய்ய முடியும் என்று" அது உண்மைதான். நாங்களும் பலமுறை ராமேஸ்வரம் செல்வதற்காக முயற்சித்தோம் ஏதாவது வேலை வந்து விடும். அப்புறம் செல்லலாம் என்று நிறுத்தி விடுவோம். ஆனால் சென்ற வாரம் தான் எங்களுக்கு இராமேஸ்வரம் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
நாங்கள் எட்டு பேர் கொண்ட குழுவாக ராமேஸ்வரம் சென்றோம். தாம்பரம் to ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ். மாலை 5:00 மணிக்கு போய் சீட்டை கண்டுபிடித்து உட்கார்ந்தோம் ஆனால் இடம் மாறி மாறி தான் கிடைத்தது. அனைவருக்கும் ஒன்றாக கிடைக்கவில்லை எங்களுக்கு இடம் கிடைத்த பெட்டியில் நான்கு பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பம் வந்து அமர்ந்தார்கள். இரண்டு குடும்பமும் அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தோம். (ரயில் ஸ்நேகம்).

ரயில் ஆறு மணிக்கு புறப்பட்டது. இரவு பத்தரை மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். அவர்கள் ராமநாதபுரம் ஸ்டேஷனில் இறங்கி சென்று விட்டார்கள். அடுத்தது 4. 40 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். எங்களுடைய குழு நண்பர்கள் எட்டு பேரும் ரயில்வே பிளாட்பாரத்தில் இறங்கி ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம்.
பிறகு ஆட்டோவில் ஏறி தங்கும் இடத்திற்கு சென்றோம். செல்லும் வழியில் காலையிலேயே அவ்வளவு கூட்டம்.

கடற்கரைக்குச் செல்லும் வழியில் மட்டும் இல்லாமல் கோயிலுக்குச் செல்லும் அனைத்து மாடவீதிகளிலும் மக்கள் கூட்டம். வியப்பாக பார்த்துக் கொண்டே நாங்கள் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். காலை 5.30 மணிக்கு சுற்றுலா பயணிகள் சேது சமுத்திரத்தில் இறங்கி நீரில் மூழ்கி நீராடினார்கள். வட மாநிலத்தவர்கள் அதிகம் பேர் வந்திருந்தார்கள். எல்லோரும் குழந்தையும், குட்டியுடன் குடும்பம் குடும்பமாக வந்து கடலில் மூழ்கி நீராடினார்கள். தங்களது பாவங்களை நீக்கி புண்ணியங்களை சேர்ப்பதற் காகவும், தங்களுடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை திருப்திப்படுத்தவும் பக்தியுடன் நீராடினார்கள்.
5.55 மணிக்கு மெல்ல சூரியன் கடலில் இருந்து உதயமான காட்சியை பார்க்க முடிந்தது. மிகவும் பார்ப்பதற்கு அழகாகவும், ரம்யமாகவும் இருந்தது ,தூரத்தில் பல படகுகள் வரிசையாக நின்றிருந்தது. கடலிலிருந்து குளிர்ந்த காற்று வீசியது. கடல் நீர் கொஞ்சம் அசுத்தமாகத் தான் இருந்தது. இருந்தாலும் மக்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கரையிலேயே மூழ்கி குளித்தார்கள். பின்னர் அப்படியே கோயிலுக்கு செல்கிறார்கள். நாங்களும் அந்த காட்சி எல்லாம் பார்த்துக் கொண்டே நீராடுவதற்கு தயாரானோம்.
(பயணங்கள் முடிவதில்லை)
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)
மக்களே உஷார்...2100-க்குள் மனித இனம் அழியும் அபாயம்: 'தி லான்செட்' எச்சரிக்கை
பலருக்கு வரலாறு மட்டுமே.. உங்களுக்கு வசீகரமும் இருக்கு.. சிலாகித்த வைரமுத்து..சொல்லிப் பார்த்த ரஜினி
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
Spiritual Tour: சென்னை to ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 1)
பாரதி என் தோழன்
எது சகோதரத்துவம்?
"நீ பூஜைக்கு ஏற்ற புஷ்பமா? நான் தான் உனக்கு இஷ்டமா?
தென்தமிழ் தலையங்கம்: கரீபியனில் தொடங்கிய அமெரிக்கக் கதை.. கொலம்பஸ் தினம்!
"டிரம்ப் பெருங்கடல்" : பெருங்கடல்களின் பெயரை மாற்ற டொனால்ட் டிரம்ப் புதிய திட்டம்!
{{comments.comment}}