அன்னையர் தினத்திற்கு வாழ்த்து சொல்வதில் இல்லை மகிழ்ச்சி!

May 10, 2026,02:47 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


அன்னையை அரவணைத்து 

தன்னுடனேயே  வைத்து பார்த்துக் கொள்வதில்தான் அடங்கியுள்ளது 

நம் பிறப்பின் வெற்றி ....


குழந்தையாக இருந்த போது நம்மை கண்ணுறங்காமல் கண்போல பார்த்துப் பார்த்து  

நாம் கேட்பதற்கு முன்பே நம் தேவையைப் பூர்த்தி செய்பவள் தாய்.....


அவள் தேவையை முதிர் வயதில்  

தாமாகவே பூர்த்தி செய்வதில் அடங்கியுள்ளது தாய் சேயின் அன்பு....


தாயைப் போல எந்த பிள்ளைக்கும் அன்பு எங்கிருந்தும் கிடைக்காது...




தாயின் மனது குளிரும்படி ஒருவன் வாழ்ந்தாலே....

தினமும் அன்னையர் தினம்தான் ....


அன்னை இல்லாமல்  ஒருவரும் இல்லை இவ்வுலகில்.....


முதியோர் இல்லங்கள் இல்லாமல் 

முதியோர்கள் தங்கள் சொந்த இல்லங்களில் என்று இருக்கிறார்களோ..

அன்றுதான் உண்மையான அன்னையர் தினம் ....


அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 

நாம் எத்தனை முறை சொன்னாலும் அன்னைக்கு ஈடாகாது ...


நாம் அன்னைக்கு அன்னையாக  மாறி சேவை செய்தால்தான் உண்மையான அன்னையர் தினம் ஆகும்...


உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்