நைனிடால்: ஒட்டு மொத்த தேசமும் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் ஒரு முக்கியமான நபரை எதிர்பார்த்திருந்தது. ஆனால் அவர் அங்கு வரவில்லை.. மாறாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு மனைவியுடன் விசிட் அடித்திருந்தார்.. அவர்தான் தல தோனி.
கூல் கேப்டனாக வலம் வந்தவர் தோனி. சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு அவருக்குத்தான் நாடு முழுவதும் அதி தீவிர ரசிகர்கள் உள்ளனர். இந்த கபில் தேவுக்குப் பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டன் தோனிதான். 20-20 உலகக் கோப்பை மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை என்று இரண்டு கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டனும் தோனி மட்டுமே.
ஐசிசியின் அனைத்து சாம்பியன் பட்டங்களையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் தோனிக்கு மட்டுமே உண்டு. நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பெற்று அசத்தியது. இந்தப் போட்டியைக் காண தோனி வருவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. மாறாக அவர் தனது மனைவியுடன் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தனது மனைவியுடன் போயிருந்தார். அங்குள்ள பூர்வீக கிராமத்திற்கு விசிட் அடித்திருந்தார் தோனி.
இதுதொடர்பான அழகான புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்ஷி சிங் வெளியிட்டுள்ளார். லவாலி என்ற அந்தக் கிராமம், அல்மோரா மாவட்டத்தில் உள்ளது. இதுதான் தோனியின் மூதாதையர் வாழ்ந்த கிராமமாம். இங்குதான் தோனியின் பல்வேறு உறவினர்களும் வசிக்கிறார்களாம். இதுதொடர்பான குட்டி வீடியோ ஒன்றையும் சாக்ஷி சிங் போட்டுள்ளார்.
தோனி சமூக வலைதளங்களில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார். போட்டோ போடுவதில்லை. எந்தப் பதிவும் போடுவதும் இல்லை. ஆனால் சாக்ஷி சிங் அதில் கில்லாடி. படு ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தோனி குறித்த போட்டோ, வீடியோவைப் போடுவதுதான் அவரது முக்கிய வேலையே. இதனால் ரசிகர்கள் சாக்ஷி சிங்குக்கு நன்றி கூறுவதும் வழக்கம். அந்த வகையில் இந்த போட்டோவும், வீடியோவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
2020ம் ஆண்டு அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்று விட்டார் தோனி. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!
திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
{{comments.comment}}