- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
நம் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு கவிதை கட்டுரை பாடல் என பலர் எழுதி, அவரின் சிறப்புகளைப் போற்றினாலும், நான் பெரிதாக நினைப்பது எது தெரியுமா?
இதோ உங்களுக்காக சின்ன ரீவைண்ட்....
வழக்கம்போல் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் பெரிய எதிர்பார்ப்புடன்,ஆட்டம்,பாட்டம், பேச்சு என மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். என் வகுப்பிலும் அவ்வாறே, பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.மாறுவேடப் போட்டிக்கு பெயர் தேர்வு செய்து கொண்டிருந்தேன்.
எப்பொழுதும் நேரு மாமா வேடத்திற்கும, மகாகவி பாரதியார் வேடத்திற்கும், பாரதமாதா வேடத்திற்கும் அதிகமான அளவில் பங்கேற்பு இருக்கும்.மேலும் காமராசர் சுபாஷ் சந்திர போஸ் ,இந்திராகாந்தி, வீரமங்கை வேலுநாச்சியார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் என ஒரு லிஸ்ட் தயாரானது.

ஆனால் ஒருவர் கூட மகாத்மா காந்தி வேடத்திற்கு பெயர் கொடுக்கவில்லை. நான் காந்தி தாத்தா வேடம் யாரும் போடவில்லையா என்று கேட்டேன்.
ஒரு மாணவன் மெதுவாக கையை உயர்த்தினான்.
பெயர் எழுதிக் கொண்டேன்.
இது போல் நிறைய விழாக்களில்,சில மாணவர்கள் சொன்ன வேடங்களைப் போட மாட்டார்கள். சிலர் வேற லெவலில் போட்டு அசத்தி விடுவார்கள். சுதந்திர தின விழா வந்தது.நான் மிகவும் எதிர்பார்ப்பதே, மாறுவேடம் தான். என் மாணவச் செல்வங்கள் ஒவ்வொரு தலைவராக மாறி வந்து கொண்டே இருந்தார்கள்.
திடீரென்று அனைவரும் மிஸ் அங்க பாருங்க,அங்க பாருங்க என்று கத்தினார்கள். திரும்பிப் பார்த்தால்,நம் தேசப்பிதா...ஆம்,சாய்சஞசித் தேசப்பிதாவாக மாறி வந்திருந்தான்.
எப்படி என்கிறீர்களா?ஆம்...அதற்காக அவன் மொட்டை அடித்திருக்கிறான். அவன் அண்ணனை அழைத்தேன்.... என்னடா இது என்று கேட்டேன்...
மிஸ், அம்மா தான் மிஸ், அப்போ தான் காந்தி தாத்தா மாதிரி இருக்கும்னு சொன்னாங்க, என்றான்... தேசப்பிதாவிற்கு, சாய்சஞ்சித் செய்த மரியாதையைக் கண்டு என் கண்களில் பரவசத்துடன் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர்....
இது போல் நீங்களும் நிறைய குட்டி காந்தி தாத்தாக்களைப் பார்த்திருப்பீர்கள் தானே!
மாறுவேடப் போட்டி , நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட நம் தேசத்தலைவர்களைப் பற்றி நம் மாணவச் செல்வங்கள் அறிந்து கொள்ள உதவுவதோடு,நம் தேசத்தின் மீதான பற்றையும் அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
மகாத்மா காந்திக்கு ஜே!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
குட்டி காந்தி தாத்தா!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும்!
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?
கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?
Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?
தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் ரோட்ஷோ: த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரம்
{{comments.comment}}