சென்னை: பங்காரு அடிகளார் மறைவுக்கு இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் டி.ராஜேந்தர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் பல கல்வி நிறுவனங்கள் நிறுவியவர், ஆன்மீக சேவையாற்றி வந்தவர். ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் எல்லா நாட்களிலும் கருவறை வரை சென்று வழிபாடு செய்யலாம் என்று உருவாக்கிய புரட்சியாளர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் முக்தி அடைந்ததை தொடர்ந்து பல பிலபலங்கள் மற்றும் இவரது பக்தர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறுகையில், ஆன்மீக உலகில் தனகென்று ஒரு பாதை வகுத்துகொண்ட மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது.
அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லத்தாருக்கும் பக்தர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் தேவா
இசையமைப்பாளர் தேவா வெளியிட்டுள்ள வீடியோ இரங்கல் செய்தியில், ஓம் சக்தி. எங்களது ஆன்மீக குருநாதர். நாங்கள் எல்லாம் அம்மா அம்மா என்று அன்போடு அழைக்கும் எங்கள் அம்மா பங்காரு அடிகளார் அவர்கள் ஆதிபார சக்தி ஓம்காரத்தில் கலந்து விட்டார் என்ற செய்தியை கேட்டதில் இருந்து மனசே சரியில்லை.
பிரம்மாண்டமான புரோகிராமிற்காக போன வாரம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தோம். நடமாடும் தெய்வம் ஆதிபாரசக்தி ஓம்காரத்தில் கலந்துட்டாங்க என்று செய்தியை கேட்டதில் இருந்து ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னைக்குமே அம்மா ஆசிர்வாதம் நமக்கு இருக்கும். அவங்க எங்க இருந்தாலும் நம்மளை வாழ வச்சிக்கிட்டுதான் இருப்பங்க ஓம்சக்தி, ஓம்சக்தி என்று கூறியுள்ளார்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}