"போர்" ரிஷிகாதான் நான்.. அதுதான் என்னோட ரியல் கேரக்டர்.. சஞ்சனா நடராஜன் செம ஹேப்பி!

Feb 18, 2024,06:07 PM IST

சென்னை: என்னுடைய நிஜ கதாபாத்திரம் தான் போர் படத்தில் நான் நடித்துள்ள ரிஷிகா கேரக்டர் என்று கூறியுள்ளார் நடிகை சஞ்சனா நடராஜன்.


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்து திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் சஞ்சனா. 2014ம் ஆண்டு வெளியான நெருங்கிவா முத்தமிட படத்தில் நாயகியின் தோழியாக நடித்தவர். தமிழ் மொழியை நேர்த்தியாக பேசி, தனித்துவமான கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரக்கூடியவர் நடிகை சஞ்சனா நடராஜன். 




இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார்.  அடுத்து அவர் நடிப்பில் வெளியாக உள்ள  'போர்' திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலோடு காத்துள்ளார்.


போர் படத்தின் டீசரில் அவரது டிரெண்டி மற்றும் ஃபேஷனபிள் தோற்றம் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் சஞ்சனா தனது கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகையில், 'ரிஷிகா' என்ற மருத்துவ மாணவியாக நடித்துள்ளேன். இந்த படத்தில் தான் நடித்துள்ள ரிஷிகா கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கை இயல்பை ஒத்திருக்கிறது. நண்பர்கள் குழுவைச் சுற்றி சுழலும் இந்தக் கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைக் கூறும்.




இது அரசியல் விஷயங்களைப் பேசுவதோடு, சில சமூகப் பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறது. படக்குழுவில் உள்ள அனைவரும் உற்சாகத்தோடு வேலை செய்தோம். இயக்குநர் பிஜாய் நம்பியாரும் படத்தை தெளிவான பார்வையோடு கொண்டு சென்றார். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கதை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவானது என்று சஞ்சனா நடராஜன் கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

உயிர் மூச்சு என்று நினைக்கின்ற என் உத்தமிக்கு அடியேன்!

news

வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!

news

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

news

கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

செட்டிநாட்டு அடுப்படி.. காரசாரமான நான் வெஜ் சுவையில்.. அசத்தலான பலாக்காய் பிரட்டல்!

news

சோஷியல் மீடியா சமையல்ங்கிறது.. பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா!

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

ஆதிக்கம் செலுத்தும் ஏஐ.. மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் குறைய ஆரம்பித்து விட்டதா?

அதிகம் பார்க்கும் செய்திகள்