"Hi நான்னா".. குடும்பங்கள் கொண்டாடும் டீசர்.. படக்குழு ஹேப்பி!

Oct 15, 2023,01:10 PM IST

- சங்கமித்திரை


சென்னை: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் 'hi நான்னா' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் டீசர் இது என்று படக் குழு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.


நானி, மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள ஹாய் நான்னா படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாமல், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகிறது.




இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் கொண்டாடும் ரசிகர்களுக்கான பரிசாக இப்படத்தின் உணர்வுபூர்வமான டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


நானி மற்றும் கியாரா கண்ணா ஆகியோருக்கு இடையேயான அழகான தந்தை-மகள் கதையாக ஆரம்பிக்கும் இந்த டீசர், பின்னர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் கதையை திரையில் காட்டுகிறது. கியாரா உண்மையிலேயே நானியின் மகளா, நானியும் மிருணாளும் இதற்கு முன் சந்தித்துள்ளார்களா, வேறொருவர் உடன் தனக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் மிருணாள் ஏன் நானியிடம் தன் காதலை சொல்கிறார் போன்ற கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்ள நீங்கள் திரைப்படத்தைத்தான் பார்க்க வேண்டும். 


பல்வேறு உணர்வுகள் நிறைந்த சவாலான கதையை தனது முதல் படத்திலேயே இயக்குநர் ஷௌர்யுவ் மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என்பது டீசரில் புலனாகிறது. நானி மற்றும் கியாரா கண்ணாவின் தந்தை-மகள் பந்தம் ஆகட்டும், நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் ஆகட்டும், அனைத்தையும் மிகவும் சிறப்பாக இயக்குநர் சமன் செய்துள்ளார். 




தனது சிறப்பான நடிப்பின் மூலம் நானி நம்மை கவர்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு உணர்வுப்பூர்வமான ஒரு பாத்திரத்தில் அவரை பார்க்க முடிகிறது. சில காட்சிகளில் இளைஞர் ஆகவும் சில காட்சிகளில் நடுத்தர வயது ஆணாகவும் அவர் ஜொலிக்கிறார். தனது இருப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் காட்சிகளை மிளிர வைக்கிறார் மிருணாள் தாக்கூர். ஏற்கனவே சீதாராமம் படத்தின் மூலம் ரசிகர்களை வசீகரித்தவர்தான் மிருணாள் தாக்கூர் என்பது நினைவிருக்கலாம்.


சானு ஜான் வர்கீஸ் ஐஎஸ்சி-யின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டத்துடன் திகழ்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசை கதைக்கும் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறது. அவினாஷ் கோலாவின் தயாரிப்பு வடிவமைப்பும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பதால் காட்சிகளின் பிரம்மாண்டம் கண்களை கவர்கிறது. 


மொத்தத்தில் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ள இந்த டீசர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரிக்கிறது.


சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்