11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு எம்.பி.க்கு தேசிய விருது!

May 19, 2025,01:09 PM IST

சென்னை: நாடாளுமன்றத்தில்  11 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டு எம்.பி. சி.என்.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்பட உள்ளது.


நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் சன்சத் ரத்னா 2025 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு, தகுதியான எம்.பி.க்களை தேசிய பிற்படுத்த்பட்டோர் ஆணையம் தேர்வு செய்தது. ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் 15ம் ஆண்டு விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. தனிநபர் பிரிவில் 17 எம்.பி.க்களுக்கும், சிறப்புப் பிரிவில் 4 பேரும் தேர்வு செய்யப்பட்டு விருது பெறவுள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசனையின் பேரில் சன்சத் ரத்னா விருதுகள் முதல்முறையாக 2010ம் ஆண்டில் பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை மற்றும் இ- பத்திரிகையான பிரீசென்ஸ் ஆகியவற்றால் நிறுவப்பட்டன. முதல் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.


இது குறித்து பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் 17 எம்.பி.க்கள் நிகழாண்டுக்கான சன்சத் விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மஹ்தாப் மற்றும் சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு) என்.கே.ரேமசாந்திரன் (புரட்சிகர சோஷலிஸ கட்சி), ஸ்ரீரங் பார்னே (சிவசேனை ஷிண்டே பிரிவு) ஆகிய 4 எம்.பி.க்கள் 16,17,வது மற்றும் 18வது மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இவர்கள் நால்வருக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு சிறப்பான மற்றும் தொடர்ச்சியான பங்களிப்பு என்று விருது வழங்கப்பட உள்ளது.




இவர்கள் தவிர ஸ்மிதா வாக் - பாஜக,  அரவிந்த் சாவந்த் - சிவசேனை உத்தவ் பிரிவு, நரேஷ் கன்பத் - சிவசேனை ஷிண்டே பிரிவு, வர்ஷா கெய்க்வாட் - காங்கிரஸ், மேதா குல்கர்னி - பாஜக, பிரவீன் படேல் - பாஜக, ரவி கிஷன் - பாஜக, நிதி காந்த் துபே - பாஜக, வித்யுத் பாரன் மஹாதே - பாஜக, பிபி சவுத்ரி - பாஜக, மதன் ரத்தோர் - பாஜக, சி.என்.அண்ணாதுரை - திமுக மற்றும் திலீப் சைகியா - பாஜக ஆகியோரும் சன்சத் ரத்னா விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய நிதி மற்றும் வேளாண்மை நிலை குழுக்களுக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் விழா ஜூலை இறுதியில் புது டெல்லியில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்