நவராத்திரி ஸ்பெஷல்.. அடுத்த நான்கு நாட்களுக்கு இப்படித்தான் கும்பிடணும்!

Oct 12, 2026,01:32 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 20 26 அக்டோபர் மாதம் 11-ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நவராத்திரி விழா பல வீடுகளில் நவராத்திரி பொம்மை கொலு வைத்து  கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்த ஒன்பது நாட்களும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி மூன்று சக்திகளும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சி தருகிறார்கள், எந்த மலர்களை கொண்டு அர்ச்சனை செய்வது, என்ன நெய்வேத்தியம், என்ன கோலம் போட வேண்டும், என்னென்ன பலன்கள்  என்பதைப் பற்றிய  தகவல்களை சென்ற பதிவில் முதல் இரண்டு நாட்கள்(11.10.2026 - 12.10.2026) அறிந்து கொண்டோம்.


இனி வரும் நான்கு நாட்கள்13.10.2026 (Day 3) முதல்16.10.2026 (Day 6) வரை அம்மனை வழிபடும் முறை பற்றிய  தகவல்கள் இதோ...


Day 3: 13.10.2026  செவ்வாய்க்கிழமை.


1. அம்மன் வடிவம்: வாராகி அம்மன் (மகிஷனை  அழித்தவள் ) 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும். 


2.திதி - திருதியை.


3. கோலம் : மலர் கோலம், பச்சரிசி மாவினால்  போட வேண்டும். 


4.அர்ச்சனை செய்யும் மலர்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பு.


5. நைவேத்தியம்: கோதுமை  சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.


6. பலன்கள் :தன தானியம் பெருகும்.வாழ்க்கையில் வெற்றி கிடைத்து சிறப்பாக அமையும்.


Day 4: 14.10.2026 புதன்கிழமை




1. அம்மன் வடிவம்: மகாலட்சுமி சிம்ஹாசனத்தில் வெற்றி திருக்கோலம்.  ஐந்து வயது சிறுமிக்கு ரோகினி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.


2. திதி :சதுர்த்தி.


3. கோலம் :அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.


4. அர்ச்சனை செய்யும் மலர்கள்:  ஜாதி மல்லி, செந்தாமரை,செவ்வந்தி, ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை கோர்த்து அம்மனுக்கு சாற்றுவது சிறப்பு 


5. நைவேத்தியம் :தயிர் சாதம்,அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல் (அவரவர்களால் இயன்றவை செய்வது சிறப்பு ).


6. பலன்கள்:  பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.கடன் தொல்லை தீரும்.


Day 5 : 15.10.2026 வியாழக்கிழமை.


1.அம்மனின் வடிவம்: மோகினி  (சும்ப நிசும்பனின்  தூதர்கள் தூது போன நாள்.) ஆறு வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.


2. திதி: பஞ்சமி.


3. கோலம்: கடலை மாவினால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை திரவியம் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.


4. அர்ச்சனை செய்ய மலர்கள்: கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.


5. நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், பால் சாதம், கடலை பருப்பு வடை, எலுமிச்சை சாதம், சுண்டல்.


6. பலன்கள் : கல்வியும்,அறிவும், செல்வாக்கும் பெருகும். நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.


Day 6  :  16.10.2026 வெள்ளிக்கிழமை.


1. அம்மன் வடிவம் :சண்டிகா தேவி சர்ப்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்.7 வயது சிறுமியை இந்திராணி காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.


2. திதி :சஷ்டி.


3. கோலம்: கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.


4. அர்ச்சனை செய்யும் மலர்கள் :பாரிஜாதம், விபூதி பச்சை, செம்பருத்தி,ரோஜா துளசி கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பு.


5. நைவேத்தியம் : தேங்காய் சாதம், தேங்காய் பால் சாதம், ஆரஞ்சு பழம்,மாதுளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம் 


6. பலன்கள்: வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும். சுபிட்சம் உண்டாகும்.


அடுத்த பதிவில் இறுதி மூன்று நாட்கள் Day 7, 8, 9 பற்றிய தகவல் காண்போம்.


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்