- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 2026 அக்டோபர் மாதம் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று முதல் ( புரட்டாசி 24) நவராத்திரி விழா ஆரம்பம்.
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கம் யாதெனில் மக்கள் அனைவரும் ஒன்று, அனைத்தும் இறை சக்தியின் வடிவமே என்று உணர்த்துவது தான். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறை சக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதே நவராத்திரி வரலாறு ஆகும்.
தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து வழிபடுவது வழக்கம்.
முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வணங்குவார்கள். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வணங்குவார்கள். இறுதியான மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வணங்குவார்கள். பத்தாவது நாள் விஜய சாமுண்டீஸ்வரி ஆக வணங்கி வழிபடுகிறார்கள்..
துர்கையான பார்வதியை முதல் மூன்று நாட்கள் அதாவது அக்டோபர் மாதம்
11- ஞாயிறு,
12 - திங்கள்.
13 - செவ்வாய் வழிபடுகிறார்கள். இந்த மூன்று நாட்களும் துர்கா தேவியை வணங்குவது தீய எண்ணங்கள் அழிந்து, மன உறுதி கிடைக்கும்.
லக்ஷ்மியை வழிபட செல்வச் செழிப்பு, பொன்,பொருள், ஒழுக்கம்,நல்ல பண்பாடு மனிதநேயம்,நற் சிந்தனை கிடைக்கப் பெறலாம். மூன்றாவதாக சரஸ்வதி தேவியை வழிபட ஞானம்,உயர்ந்த கல்வி, உயர் பதவி கிடைக்கும். ஆயகலைகள் 64 - இவற்றில் அவரவர்க்கு உகந்த கலைகளில் பயின்று தேர்ச்சி பெறுவது உறுதி.

என்னெல்லாம் செய்ய வேண்டும்?
நவராத்திரி கொலு வைத்திருப்பவர்கள் துர்கா,லட்சுமி,சரஸ்வதி மூன்று சக்திகளும் 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சி தருகிறார்கள்? என்ன நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். அதனால் என்ன பலன்? எந்த கோலம் போட வேண்டும் என்பதை பற்றிய சிறு தகவல்களை இப்பதிவில் காண்போம். புதிதாக கொலு வைப்பவர்களுக்கு இந்த பதிவு நன்மை பயக்கும்.
நவராத்திரியில் அம்பாளுக்கு விதவிதமான சுண்டல் கலவை சாதம், பாயாசம் நிவேதனம் செய்யப்படுகிறது. இதற்கு அறிவியல் ரீதியாகவும் காரணம் உண்டு.தேவர்களுக்கு சிவன் விஷ்ணு அமிர்தம் தந்து அவர்களை காத்தது போல பூமி உயிர்வாழ மழை என்னும் அமிர்தத்தை தருகிறார்கள். இதனால் பூமி 'சக்தி 'பெற்று அந்த சக்தி என்னும் பெண்ணுக்கு பூமியில் விளைந்த வித விதமான தானியங்களை பக்குவப்படுத்தப்பட்டு, சமைத்து,நிவேதனம் செய்யப்படுகிறது.
இந்த நவராத்திரி நாட்களில் சுண்டல் வகைகள் பிரதான இடம் பெறுகிறது. நவராத்திரி காலங்களில் புரட்டாசி,ஐப்பசி மாதங்களில் தொற்று நோய்கள் அதிகமாகும் இதனை போக்கும் சக்தி புரத சக்தி நிறைந்த சுண்டலுக்கு உண்டு என்பது ஐதீகம். எனவே, நவராத்திரி கொலுவில் பூஜைக்கு விதவிதமான சுண்டல் வகைகள் முக்கியமானது ஆகும்.

11.10.2026 ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் :
இன்று பிரதமை. மகேஸ்வரி மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள். 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்குகிறார்கள் .
1. கோலம் :அரிசி மாவினால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
2. அர்ச்சனை மலர்கள்: சிவப்பு நிற அரளி, மல்லிகை,வில்வ மலர்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
3. நைவேத்தியம் வெண்பொங்கல் சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல்,மொச்சை சுண்டல், பருப்பு வடை.
4. சுண்டல் வகை மொச்சை சுண்டல்.
5. பலன்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியம் மேம்படும். வறுமை நீங்கும்.
12.10.2026 திங்கட்கிழமை இரண்டாம் நாள்:
திதி: துவிதியை. ராஜராஜேஸ்வரி வடிவத்தில் மகிஷனை வதம் செய்ய புறப்படுகிறாள். மூன்று வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்கப்படுகிறது.
1. கோலம்: பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.
2. அர்ச்சனை மலர்கள்: முல்லை,துளசி,மஞ்சள் நிற கொன்றை,சாமந்தி, சம்பங்கி பூக்கள் பூஜிக்க உகந்தது.
3. நைவேத்தியம்: புளியோதரை,பாயாசம், தயிர்வடை,
4. சுண்டல் வகை: வேர்க்கடலை( நிலக்கடலை) சுண்டல்
5. பலன்: நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் மேம்பட்டு நீள் ஆயுள் கிடைக்கும்.
நவராத்திரி மூன்றாம் நாள் முதல் செய்யும் வழிபாடு, சுண்டல் வகைகள் மற்றும் இதர தகவல்கள் நாளை வரும் பதிவில் காண்போம்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
எங்கே என் வண்டி சாவி?
நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!
Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை
நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
{{comments.comment}}