நவராத்திரி என்பது தெய்வீக பெண் சக்தியை போற்றி, வழிபடுவதற்கான காலமாகும். ஒன்பது நாட்கள் அம்பிகை, அரக்கர்களுடன் போரிட்டு, அவர்களை வதம் செய்து, பத்தாவது நாளான தசமியில் வெற்றி வாகை சூடியதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி அம்பிகை, பல்வேறு தெய்வங்களிடம் இருந்து பெற்ற ஆயுதங்களை கொண்டு அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை வதம் செய்த ஒன்பது நாட்களையும் நவராத்திரி என்றும், அம்பிகை வெற்றி பெற்ற பத்தாவது நாளை விஜயதசமி என்றும் கொண்டாடுகிறோம்.
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவது உண்டு. இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு ஒன்பது நாட்களும் அம்பிகையை வழிபட்டு, அம்பிகையின் அருளை பெறுவதற்கான காலத்தை சாரதா நவராத்திரி என்கிறோம். இதையே பெரும்பாலானவர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 01ம் தேதி சரஸ்வதி பூஜை வரை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 02ம் தேதி வெற்றி தரும் திருநாளாக விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை பராசக்தியாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியாகவும், கடைசி மூன்று நாட்கள் கலைமகளான சரஸ்வதி தேவியாகவும் நாம் வழிபடுவது வழக்கம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கையின் ஒன்பது வடிவங்களை வழிபடுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது. இதை துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுவது உண்டு.
நவராத்திரி வழிபாட்டின் போது வீடுகளிலும், கோவில்களிலும், பெரிய நிறுவனங்களிலும் கொலு வைத்து வழிபடுவார்கள். அப்படி கொலு வைத்து வழிபட முடியாதவர்கள் கலசம் அமைத்து வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் வீட்டில் அகண்ட தீபம் எனப்படும் அணையா தீபம் ஏற்றி வழிபடலாம். இது எதுவும் செய்ய முடியாதவர்கள் அம்பிகையின் படத்தை வைத்து வழிபடலாம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் காலை மற்றும் மாலையில் வீட்டில் விளக்கேற்றி, அம்பிகைக்கு பூ போட்டு, அந்தந்த நாளுக்குரிய நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
நவராத்திரியின் முதல் நாள் வழிபாட்டினை செ்படம்பர் 22ம் தேதியன்று காலை 6 மணி முதல் 07.20 மணி வரையிலான நேரத்திலோ அல்லது காலை 09.10 மணி முதல் 10.20 மணி வரையிலான நேரத்திலோ துவக்கலாம். அப்படி இல்லை என்றால் மாலை 6 மணிக்கு பிறகு வழிபடலாம். நவராத்திரி வழிபாட்டின் போது அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், துர்காஷ்டகம், காமாட்சி அஷ்டகம் உள்ளிட்ட துதிகளை பாடி அம்பிகையை வழிபடலாம்.
நவராத்திரி முதல் நாள் வழிபாடு :
அம்பிகையின் வடிவம் - உமா மகேஸ்வரி
கோலம் - அரிசி மாவால் பொட்டு வகை கோலம்
மலர் - மல்லிகை
இலை - வில்வம்
நைவேத்தியம் - வெண்பொங்கல்
தானியம் - சுண்டல்
நிறம் - பச்சை
ராகம் - தோடி
கவிதாயினியின் இரவுகள்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா.. அப்படின்னு கேட்பவர்களுக்காக.. ஸ்பெஷல் கோதுமை ரவா பொங்கல்!
மகர விளக்கு பூஜைக்காக.. சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
நான் பாடும் மெளன ராகம்... A song that never ends!
எளியவர், ஏற்றம் கண்டவர்.. சுயசார்பு சிந்தனையை நடைமுறையில் காட்டியவர்!
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
{{comments.comment}}