சென்னை: 2024 ஆண்டுக்கான இளங்கலை நீட்தேர்வு நாடு முழுவதும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அது குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இந்த தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
www.nta.ac.in, https://exams.nta.ac.in/NEET இணையதளம் மூலம் ஆன்லைனில் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நீட் தேர்வு அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும். நீட் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.1700. ஓ. பி. சி பிரிவினருக்கு ரூ. 1600, மூன்றாம் பாலினத்தவற்கு ரூ.1000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 9, 2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது முடிவுகள் எதிர்பார்க்கப்படும் விண்ணப்பதாரர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தனி தேர்வுகளாக தேர்ச்சி பெற்றவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பங்கேற்க தகுதி உள்ளவர்கள்.
தேர்வு மே 5.2014 அன்று நடத்தப்படும். தேர்வு நேரம்3 மணி 20 நிமிடங்கள் நீட் யுஜிசிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். மேலும், தொடர்புடைய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய வலைதளத்தைப் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}