ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

Jun 15, 2026,04:35 PM IST

சென்னை: தமிழகத்தில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி தொடங்கி வைக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்த பொதுமக்களுக்கு, முதற்கட்டமாக புதிய கார்டுகளை விநியோகம் செய்வதற்கான பணிகளை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கமாக, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விநியோக முறை முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.


46,000 புதிய குடும்ப அட்டைகள் தயார்:


உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, தமிழகம் முழுவதும் விநியோகிப்பதற்காக முதற்கட்டமாக சுமார் 46,000 புதிய குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள் கோரி மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 2.25 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன.


இது குறித்து உணவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்கும் பணி அடுத்த சில நாட்களில் தொடங்கப்படும். முதற்கட்டமாக 46,000 அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. தகுதியான பயனாளிகளுக்கு இந்த அட்டைகள் படிப்படியாக தடையின்றி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.




பெரம்பூர் தொகுதியில் தொடக்க விழா?


முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதலமைச்சர் விஜயின் முதல் பிறந்தநாள் இது என்பதால், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவிக) இதனை மாநிலம் தழுவிய அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 22 அன்று முதலமைச்சர் விஜய்யின் சொந்த சட்டப்பேரவைத் தொகுதியான பெரம்பூரில் நடைபெறும் அரசு விழாவில், அவர் கலந்துகொண்டு புதிய குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு நேரில் வழங்கி இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைப்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் தொகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் வாராந்திர நலத்திட்ட உதவிகளை வழங்க விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் தகுதியான அடித்தட்டு மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து முடிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்