யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது

Jul 16, 2025,01:08 PM IST

சென்னை: யூடியூப் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் பதிவேற்றம், குறைந்த தரம், செயற்கை நுண்ணறிவு வீடியோக்களுக்கு வருமானம் இல்லை. அசல் உள்ளடக்கத்துக்கு மட்டுமே இனி வருவாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இன்றைய டிஜிட்டல் உலகில் யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. யூடியூப் குறுகிய காலத்தில் புகழையும், வருமானத்தையும் அள்ளிக் கொடுப்பதால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான யூடியூப் சேனல்கள் முளைத்து வருகின்றன. அதே நேரம் வருமானத்தை பெருக்குவதற்காக பல்வேறு நூதன யுக்திகளை பின்பற்றி காப்பி போஸ்ட் வீடியோக்களும், ஏஐ தொழிநுட்பத்திலும் அதிகப்படியான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டும் இன்றி இணைய தளங்கள் மூலம் எந்தவொரு சிரமமுமின்றி, சில நிமிடங்களிலேயே வீடியோக்களை உருவாக்கி பலர் பதிவிட்டு காசு பார்த்து வருகின்றனர்.




இதற்கெல்லாம் தற்போது முற்றுபுள்ளி வந்து விட்டது என்றே சொல்லலாம். பொதுவாக youtube சேனல்கள் வருமானம் ஈட்டுவதற்கு தகுதியாக ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ், ஓராண்டில் நான்காயிரம் மணி நேரம் வாட்ச் ஹவர்ஸ் அல்லது மூன்று மாதத்தில் ஒரு கோடி ஷார்ட்ஸ் வீடியோ பார்வைகளை பெற வேண்டும் என்ற விதி வழக்கத்தில் இருந்தது. இனி இது மட்டுமே வருமானம் ஈட்டுவதற்கான தகுதியாக கருதப்படாது என்று புதிய விதிமுறைகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


இதே போல் ஒருவர் போட்ட வீடியோவுக்கு ரியாக்ஷன் வீடியோ உருவாக்கும் போது அதில் கிரியேட்டரின் புதிய முயற்சியும் பங்கும் அதிகம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பார்வையாளர்களை பெறுவதை தாண்டி பொழுதுபோக்கு அல்லது கல்வி சார்ந்ததாக இருந்தால் மட்டுமே இனி வருமானம் கிடைக்குமாம். பல வீடியோக்களில் இருந்து தொகுக்கப்படும் காம்பிளேஷன் வீடியோக்களை உருவாக்கினால் அதில் கிரியேட்டரின் பங்கு அதிகம் இருக்க வேண்டுமாம். 


உதாரணமாக ஏஐ பற்றி வீடியோக்களை உருவாக்கும் போது வீடியோவில் ஒரு சில ஏஐ புகைப்படம் அல்லது வீடியோவை குறைவான அளவு பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. அதனை விடுத்து  வீடியோ முழுவதும் ஏஐ முறையில் வீடியோவை உருவாக்கினால் அதற்கு வருமானம் கிடைக்காதாம். அதே போல தரம் குறைந்த வீடியோக்களுக்கும் பணம் கிடைக்காதாம். தங்களது சொந்த முயற்சியில் உருவாக்கும் வீடியோக்களுக்கு மட்டுமே ப்ரொமொட் செய்யப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறுமனே வருமானம் ஈட்டும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுவதை தடுக்கவே விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையைக் குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

news

ஹலோ மும்பை இந்தியன்ஸ்.. முதல்ல கேப்டனை மாத்துங்க.. ஆர்.அஸ்வின் வார்னிங்!

news

வலிமையான மனமும்.. தெய்வமும்.. நித்தியஸ்ரீயின் இரு கவிதைகள்!

news

Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

news

அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு

news

நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்

news

ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

news

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

news

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்