டெல்லி: இந்தியாவிலேயே அதிக அளவிலான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த பெருமை மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குத்தான் உண்டு. அவர் மொத்தம் 10 பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக 6 பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அந்த சாதனையை தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமன் செய்கிறார்.
இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருப்பது 6வது பட்ஜெட்டாகும். தற்போதைய மத்திய அரசு பதவியேற்றது முதல் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இருந்து வருகிறார். இதுவரை அவர் 5 முழு அளவிலான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இன்று அவர் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.
இதன் மூலம் 6 பட்ஜெட்டுகளை சமர்ப்பித்த 2வது நிதியமைச்சர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்குக் கிடைக்கிறது. இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக 6 பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார். அவரும் நிர்மலா போலவே 5 முழு பட்ஜெட்டுகளையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தவர். அதன் பிறகு பிரதமராக இருந்தபோது மேலும் 4 பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்தார். இந்தியாவிலேயே அதிக அளவிலான பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தவர் மொரார்ஜிதான்.
ப.சிதம்பரம்
மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு அதிக அளவிலான பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்த பெருமை நம்முடைய ப.சிதம்பரத்திற்கு உண்டு. அவர் நிதியமைச்சராக 9 பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார். 90களில் தொடங்கி 2000மாவது ஆண்டுகள் வரை அவரது பதவிக்காலம் பரந்து விரிந்திருந்தது. இவரது காலத்தில்தான் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள், நிதி ஸ்திரத்தன்மை, உலகளாவிய பொருளாதார மயமாக்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் முகர்ஜி
முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக 8 பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார். 80களில் தொடங்கி 2012 வரை இவரது பதவிக்கலாம் நீண்டிருந்தது.
யஷ்வந்த் சின்ஹா
பாஜக சார்பில் அதிக பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்த பெருமைக்குரியவர் மறைந்த யஷ்வந்த் சின்ஹாதான். வாஜ்பாய் காலத்தில் நிதியமைச்சராக வலம் வந்தவர் யஷ்வந்த் சின்ஹா. 7 பட்ஜெட்டுகளை இவர் தாக்கல் செய்துள்ளார். 1998ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை இவர் நிதியமைச்சராக இருந்தார்.
சிந்தமன் துவாரகாநாத் தேஷ்முக்
இதேபோல மறைந்த சிந்தமன் துவாரகாநாத் தேஷ்முக் என்ற நிதியமைச்சரும் 7 பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார். இவர்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னராக இருந்தவர். 1943ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் அப்பதவியை இவர் வகித்தார். 1950ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று 1956 வரை அப்பதவியில் நீடித்தார்.
மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 6 பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார். பிரதமராவதற்கு முன்பு அவர் நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராக ஜொலித்தவர். இவரது காலத்தில்தான் இந்தியப் பொருளாதாரம் புதிய பரிணாமத்தில் நடை போட ஆரம்பித்தது. இவரது பட்ஜெட்டுகள் அனைத்துமே இந்தியாவின் இன்றைய பொருளாதாரத்திற்கு அடித்தளம் போட்டவையாகும்.
ஒய்.பி. சவான்- அருண் ஜெட்லி
மறைந்த ஒய்.பி. சவானும், அருண் ஜெட்லியும் தலா 5 பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
நிர்மலா சீதாராமன் சாதனைகள்
நிர்மலா சீதாராமனைப் பொறுத்தவரை பல சாதனைகளுக்குரியவராக அவர் திகழ்கிறார். இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் இவர்தான். ஒரு பெண் நிதியமைச்சராக அதிக பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தவர் இவர்தான். பாஜக அரசின் முதல் பெண் நிதியமைச்சரும் நிர்மலாதான். யஷ்வந்த் சின்ஹாவுக்குப் பிறகு அதிக பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்த 2வது பாஜக நிதியமைச்சரும் நிர்மலா தான். இப்படி பல சாதனைகள் நிர்மலா சீதாராமனிடம் உள்ளது.
Heavy Rain Alert: சென்னை மக்களே கவனம்.. 23, 23 தேதிகளில் சூப்பர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தகவல்!
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}