சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது. எங்களுக்குள் இருக்கும் விஷயங்களை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம் என்று தமிழக செல்வப்பெருந்தகை
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று பேசுகையில், திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நன்மைகளைச் செய்துவரும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பல நெருக்கடிகளைக் கொடுத்து, துரோகத்தையும் அநீதிலையும் செய்து வருகிறது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுடன் பேசுகையில், இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியும் தொடர்ந்து வலுவாக உள்ளது. திமுக மீண்டும் தொடர்ந்து வெற்றி பெறும். இந்த திமுக அரசே தொடரும் என்று மக்கள் ஏற்கெனவே சான்றிதழ் வழங்கிவிட்டனர். நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கட்சித் தலைவரால் தொகுதிப் பங்கீடு குழு விரைவில் அமைக்கப்பட்டு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும், பிப். 22 ஆம் தேதி முதல் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அவர் இப்படிச் சொல்லிவிட்டார். இவர் இப்படிச் சொல்லிவிட்டார். இதனால் கூட்டணிக்குள் ஒரு பிணக்கு இருக்குமா?. பிரச்சனை இருக்குமா?. விரிசல் வருமா? என்று நிறையப் பேர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒருவர் கேட்கிறார். அதற்கு மற்றொருவர் அது தமிழ்நாட்டிற்கு உகந்தது இல்லை என்று தெரிவிக்கிறார். இதனால், பிரச்சனை ஒன்றும் இல்லை. தமிழக தலைமையும், தேசிய தலைமையும் இதற்கு சேர்ந்து பேசி தீர்வு காண்பார்கள். அனைவருக்கும் எழுத்துரிமை பேச்சுரிமை உண்டு. கருத்துரிமையும் உண்டு என்றார். அதனால், கூட்டணி ஆட்சியா என்பதை திமுக தலைமையும், காங்கிரஸ் தேசிய தலைமையும் சேர்ந்தே முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், பாஜகவினர் பிளவு படுத்தியே பேசி வருகின்றனர். பிளவு படத்தியே பழக்கம் பட்டவர்கள். ஒரு போதும் பாரதிய ஜனதா கட்சியும், அதனுடைய அங்கமாக இருக்கின்ற அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு நலனைத் தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக் கொடுத்தவர்கள் தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் அவர்கள். தமிழ்நாட்டு மக்களை முதுகில் குத்தியவர்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியவர்கள். ஒரு வாரத்துக்கு முன்னாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு அறிவிப்பு கூட கிடையாது.
இது குறித்து ஏன் அதிமுக வாயைத் திறக்கவில்லை?. இதெல்லாம் யாரும் கேட்கவில்லையே? தமிழ்நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்களான நீங்கள் எப்படி மக்களைப் பார்க்கப் போகிறீர்கள். எப்படித் தேர்தலைச் சந்திக்கப் போகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு விபரம் இல்லாதவர்களா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டீர்கள். திட்டங்கள் தீட்ட மாட்டீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான சிந்தனையில் உள்ளவர்களுக்கு எப்படி வாக்களிப்பார்கள். அதனால் இந்த தேர்தலைச் சந்திப்பது அரசியல் கட்சிகள் என்பதை விடத் தமிழ்நாட்டைத் தமிழ் மண்ணை பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}