திருநள்ளாறு: வரும் மார்ச் 29ம் தேதி சனிப்பெர்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை திருநள்ளாறு கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இருந்து ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைந்து செல்வது வழக்கமான ஒன்று தான். இருந்தாலும் கிரகங்களின் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஜோதிட ரீதியாக கிரகப் பெயர்ச்சி என்பது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கிரகங்களிலேயே அனைவரையும் நடுங்க வைக்கும் கிரகம் என்றால் அது சனி கிரகம் தான்.
ஜோதிட ரீதியாக சனி பகவானை மந்தகாரகன் என்று அழைக்கிறார்கள். மெதுவாக நகரமும் கிரகமான சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதற்கு இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். "சனியை போல் கொடுப்பவரும் இல்லை; கெடுப்பவரும் இல்லை", "குரு கொடுப்பதை சனி தடுப்பார்; சனி கொடுத்தால் எவர் தடுப்பார்" ஆகியன சனியின் ஆற்றலை சொல்வதற்காக ஜோதிடர்கள் கூறும் மொழியாகும். சனி பகவான் எந்த அளவிற்கு கெடு பலன்களை தருகிறாரோ, அதை விட பல மடங்கு அதிகமான நன்மைகளையும் வழங்கக் கூடியவர்.
தற்போது கும்ப ராசியில் இருந்து வரும் சனி பகவான், வரும் மார்ச் 29ம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக சனிப் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அனுபவிக்க போகும் சாதக பாதகங்கள் பற்றிய பலன்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதே போல் சனிப் பெயர்ச்சியில் பாதிப்பை சந்திக்க போகும் ராசிகள் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்ற தகவல்களும் சமூக வளைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இதற்கிடையில் சனிப் பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் பல சனி பகவான் சிறப்புக்குரிய தலங்களில் நடைபெற்று வருகிறது. ஆனால் சனி பகவானுக்குரிய முக்கிய பரிகார தலமாக விளங்கும் திருநள்ளாறில் எந்த ஏற்பாடும் நடைபெறவில்லை. இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது, மார்ச் 29ம் தேதி சனிப் பெயர்ச்சி கிடையாது. வாக்கிய கணித பஞ்சாங்கத்தின் படி, 2025ம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி என்பது கிடையாது. 2026ம் ஆண்டில் தான் சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதனால் திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றி மற்ற கோவில்களில் மார்ச் 29ம் தேதி நடைபெறலாம் என சொல்லப்படுகிறது. அதே சமயம் திருநள்ளாறில் 2026ல் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என தெரிகிறது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}