- ஸ்ரீ
கடும் வெயில் காலத்தில் உழைக்கும் தொழிலாளர்களைப் பார்க்கும்போது நமக்கும் வியர்க்கும். இந்த வெயிலில் நம்மால் நடக்கவே முடியலையே என்று அங்கலாய்ப்போர் அதிகம். ஆனால் இவர்கள் எப்படி இந்த கொளுத்தும் வெயிலில் சளைக்காமல் வேலை செய்கிறார்கள் என்ற ஆச்சரியம் எழும்.
இப்படிப்பட்ட திறமையானவர்கள், உழைப்பைச் சிந்துபவர்கள்தான் தொழிலாளர்கள். இவர்களுக்காகத்தான் மே 1ம் தேதியன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் வந்த கதை ரத்தத்தால் எழுதப்பட்டது.
முதன் முதலில் கி.பி. 1886 ஆம் ஆண்டு சிக்காகோ நகரில் உள்ள அனைத்து உழைப்பாளர்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் சில கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவற்றில் முதன்மையானது :
'எட்டு மணி நேர வேலை' என்பதாகும். ஆனால் அந்தப் போராட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப்படாததால் தோல்வியில் முடிந்தது. தடியடிகள் மூலம் அவர்களைக் கட்டுக்குள்கொண்டு வந்தனர்.
.jpg)
பின்னரும் பல தொடர் போராட்டங்கள் நடந்ததன் பயனாக 1890 ஆம் ஆண்டு சிக்காகோ நகரில் 'எட்டுமணி நேர வேலை' - என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடத்தில் ஒரு நாள் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை - என்று வழங்கப்பட்டது.
இதுவே தொழிலாளர் தினம் என்று அழைக்கப்படுகிறது. இது மேலும் பல நாடுகளுக்கும் பரவியது. நமது இந்தியாவில் முதன்முறையாக சென்னை மாகாணத்தில் 1923ஆம் ஆண்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அதில் உழைப்பின் அடையாளமாக சிவப்புக் கொடியைத் தங்கள் கொடியாக ஏற்றுக் கொண்டார்கள்.
தொழிலாளர்களுக்கு உரிய 'சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினமாக 'மே மாதம் முதல் நாள் இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்கள். தொழிலாளர்கள், உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த வெற்றி ஆதலால் உழைப்பாளர்கள் தினமாக மே முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
இதுவும் ஒரு போராட்டத்தால் கிடைத்த வெற்றியே! ஆம்! இன்று நாம் ஆவலுடன் கொண்டாடும் (May Day) மே தினம், அன்று நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயரிடம் போராடி விடுதலை பெற்றதைப் போல, இந்த மே தினமும் போராடிக் கிடைத்த வெற்றியே ஆகும்.
தொழிலாளர் நலச்சட்டங்கள் உரிமைகள் என்று எல்லாமும் இருந்தாலும் இன்றும் பல இடங்களில் அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகத்தான் செய்கிறார்கள் என்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றே.
நமக்காகப் போராடி மே தின உரிமைகளைப் பெற்றுத் தந்த அனைத்து உழைப்பாளர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(கட்டுரையாளர் : திருமதி. ஸ்ரீ, நீடாமங்கலம், திருவாரூர். இனிய இல்லத்தரசி. கைவினைக் கலைகளில் தேர்ந்தவர். இளங்கலை வணிகவியல் பட்டதாரி. எழுத்துக்கலைக்குப் புதியவர்)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
GenZ effect: அடியோடு மாறுது உலகம்.. இது மாற்றமா? ஏமாற்றமா?
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைத்தால்.. விஜய் எடுக்க போகும் அடுத்த அதிரடி முடிவு!
அரசுப் பள்ளிகளில் டாப் தேர்ச்சி ஈரோடு.. முதல் 5 மாவட்டங்கள் விவரம்!
{{comments.comment}}