GenZ effect: அடியோடு மாறுது உலகம்.. இது மாற்றமா? ஏமாற்றமா?

May 08, 2026,02:14 PM IST

- எழுத்தாளர் சுசரிதா


தமிழ்நாடு சட்டசபைத்  தேர்தல் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது .


இளைய தலைமுறை, Gen Z மற்றும் Gen Alpha  இதை நடத்திவிட்டதாகவே புரிந்து கொள்ளமுடிகிறது. பலரும், என் மகன், அந்தக் கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும்! என்று சத்தியம் வாங்கிக் கொண்டான், என் மகள் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் வீட்டிற்கே வராதே! என்கிறாள், என் பேரன் அந்தக் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் என்னோடு பேசாதே! என்கிறான் போன்ற சம்பாஷணைகளைப் பரவலாகவே கேட்கமுடிந்தது. 


இது என்ன அரசியல் மாற்றமா? 


சமீபத்தில் ஒரு நடிகரின் மகள், திருமணம் இல்லாமலும் சேர்ந்து வாழலாம், குழந்தை பெற்றுக் கொள்ளலாம்! என்று சொல்லிவிட, அதற்குப் பல எதிர் வினைகள் கேவலமான வார்த்தைகளில் எழுந்தன.


அதை ஒற்றைப் பெண்ணின் வார்த்தைகள் என்று சொல்லி நாம் எளிதாய்க் கடந்து விடமுடியாது. அது நம் சமுதாயத்தின் தற்போதைய இளைய தலைமுறையின் எண்ணப் பிரதிபலிப்பு! வழிவழியாய்ப் பின்பற்றப்பட்ட திருமண உறவுகள், குழந்தைகள், குடும்பம் என்ற சமுதாயக் கட்டமைப்பு ஆட்டம் காண்கிறது. 


இது என்ன சமுதாயப் புரட்சியா? 


இவையெல்லாம் சரியா தவறா? 




சரியோ, தவறோ இவை தவிர்க்கவே முடியாத மாற்றங்கள் என்பதுதான் அப்பட்டமான நிஜம்! 


இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கிவிட்டது, அடியோடு மாறிவிட்டது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடப்பதை கூட வினாடிக்கு வினாடி தொழில்நுட்பம் கொண்டுவந்து நம் முகத்தில் துப்புகிறது. வெளிநாட்டு வாழ்க்கை என்பது சகஜமாகிவிட்டது.


வெளிநாட்டுப் பணம் வேண்டும், பிள்ளைகள் அங்கே வாழ்கிறார்கள் என்ற பெருமை வேண்டும், ஆனால் அவர்கள் என்னைப் போலத்தான் சிந்திக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். மிகப்பெரிய உலகத்தை, மாற்றுக் கலாச்சாரத்தைப் பார்ப்பவர்களை நாம் ஒரு குண்டு சட்டியில் அடைத்து வைக்க  முடியுமா? 


எங்களைப் போலவே  திருமணம் செய்து கொள்ளுங்கள், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், வழிவழியாய் வந்த கட்சிக்கு எங்களைப் போலவே விசுவாசமாய் இருங்கள்! என்கிற பம்மாத்தெல்லாம் இன்றைக்கு எடுபடுமா? 

Gen Z, Gen Alpha தலைமுறையில் எந்த வள்ளுவன்வாசுகியைத் தேடுவது? பெரும்பாலான பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்ட காலத்தில் அவர்கள் மீது எதையும் சமுதாயத்தால் திணித்து விடமுடியாது. 


இளைய தலைமுறை ஆண்களோ பெண்களோ, வெளிநாட்டவரைப் போல தங்கள் வாழ்க்கைமுறையை தாங்களே, தாங்கள் மட்டுமே முடிவு செய்யும் மனநிலைக்கு வந்து விட்டார்கள். கலாச்சார சீர்கேடு என்ற மூத்தவர்களின் கூப்பாடு கதறல்கள், அவர்களுக்குப் பூமர்களின் புலம்பலே! 


அரசியல் ரீதியாக காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் போன்று முன்னேற்றப் படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாய் ஏறிப் பாடம் கற்றுக்கொண்டு வந்தவர்களைப் பார்த்திராதவர்கள் இந்தத் தலைமுறை. whatsapp, Insta, swiggy என்று  நினைத்தவை எல்லாம் மின்னல் வேகத்தில் உடனுக்குடன் நிறைவேறும் மாய உலகில்  வாழ்பவர்கள். 


இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். உலகம் இன்னும் அதிவேகமாய் மாறும். பழையன கழிதலும் புதியன புகுதலும்.. என்று மாற்றம் மட்டுமே மாறாதது. 


ரோபோக்களின் ஆதிக்கமும், நிலவில் மனிதர்கள் குடியேறும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை. இந்தப் பேரண்டத்தில் மனிதர்கள் மட்டுமே இல்லை என்பதை நிரூபணம் செய்து வேற்று கிரகவாசிகள் சர்வ சாதாரணமாய் பூமியில் வலம் வரும் காலங்களும் வரலாம். 


அதிவேகமாய் காட்சிகள் மாறி வரும் இந்தப் பூவுலகில் இனி வரும் அடுத்த, அடுத்த தலைமுறையின் எண்ண ஓட்டங்களும், நம்பிக்கைகளும், வாழ்க்கை முறையும் அதற்குத் தகுந்தாற் போலவே இருக்கும். 


இதற்கெல்லாம், தய்யாதக்கா என்று யார் குதித்தாலும், மறுதலித்தாலும், அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும், போராட்டம் நடத்தினாலும், எந்தத் தகிடுதத்தமும் உலகத்தின் போக்கை தடுத்து விடமுடியாது. 


பூனைக் கண்களை மூடி கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா என்ன!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது

news

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!

news

கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

news

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்

news

நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்

news

LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்

news

அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா

news

Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!

news

அருணின் மாற்றம்.. திருக்குறள் கதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்