அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!

Nov 10, 2024,04:47 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மறுபடியும் விஜய்யை அன்புத் தம்பி என்று விளித்திருப்பது அரசியல் அரங்கில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்த தலைவர்களுக்கு சீமான் நன்றி கூறியுள்ளார். அதில்தான் விஜய்யை அன்புத் தம்பி என்று அவர் தெரிவித்துள்ளார்.


விஜய் கட்சி மாநாடு நடக்கும் வரை சீமான், அவரை தம்பி தம்பி என்றுதான் அழைத்து வந்தார். என் தம்பி, என் தம்பி என்றி கூறி வந்தார். மாற்றுக் கருத்தில் அவர் நடை போட்டாலும் கூட நான் அவர் மீதான பாசத்தை விட மாட்டேன் என்றும் கூறி வந்தார். மாநாட்டுக்கு அவர் அழைக்காவிட்டாலும் போவேன் என்றும் கூறி வந்தார். ஆனால் மாநாட்டில் விஜய் பேசிய பேச்சுக்குப் பிறகு டோட்டலாக மாறி விட்டார் சீமான்.


விஜய் கொள்கை வேறு, எங்க கொள்கை வேறு என்று கூறி வரும் அவர் சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் கூட்டத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, அதிர வைத்தது. இதையடுத்து சீமானை கடுமையாக விமர்சித்துப் பேச ஆரம்பித்தனர் தவெக கட்சியினர். ஆனால் சீமான் உள்பட யாரையும் அநாகரீகமாக விமர்சிக்கக் கூடாது என்று விஜய் உத்தரவிட்டதால், தவெகவினர் தங்களது கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு நாகரீகமாக விமர்சித்து வருகின்றனர்.




இந்த நிலையில்தான் சீமான் பிறந்த நாள் வந்தது. அதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். விஜய்யும், அன்புச் சகோதரர் என்று கூறி வாழ்த்தியிருந்தார். இதை பலரும் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த தலைவர்களுக்கு நன்றி கூறி அறிக்கை விடுத்துள்ளார் சீமான். அதில் அன்புத் தம்பி என்று விஜய் பெயரையும் குறிப்பிட்டிருப்பதை தவெகவினர் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து விவாதித்து வருகின்றனர்.  பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அடுத்த இடத்தில் விஜய்யின் பெயரை வைத்துள்ளார் சீமான் என்பது இன்னொரு கவனிப்புக்குரிய விஷயம். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:


என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த, முன்னாள் முதல்வர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக-தமிழ்நாடு முன்னாள் தலைவருமான அம்மையார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும்,


தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் பெருமதிப்பிற்குரிய பெருந்தகை எங்கள் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கும், மனித நேய அறக்கட்டளை நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா சைதை துரைசாமி அவர்களுக்கும்,


மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும், புரட்சித்தமிழன் பேரன்பிற்கினிய அண்ணன் சத்தியராஜ் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா டி.டி.வி.தினகரன்அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பு அண்ணன் முனைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கும்,


தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்!


அன்புத் தம்பி அண்ணாமலை.. அன்புத் தம்பி விஜய்


பாஜகவின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கும், பாஜகவின் மகளிர் அணி தேசியச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரி வானதி சீனிவாசன் அவர்களுக்கும், 


அன்பு அண்ணன் நடிகர் இராமராஜன் அவர்களுக்கும், அண்ணன் இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கும், அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் அன்பிற்கினிய இளவல் சேது.கருணாஸ் அவர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தம்பி ப.இரவீந்திரநாத் அவர்களுக்கும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும், இயக்குநர் அன்புத்தம்பி மு.களஞ்சியம் அவர்களுக்கும், மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் தம்பி செ.முத்துப்பாண்டி அவர்களுக்கும்,


இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் தடா ஜெ. ரஹீம் அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி சங்கத்தமிழன்அவர்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் அன்புத்தம்பி ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர் அணி மாநிலச்செயலாளர் அன்புத்தம்பி கவிஞர் சினேகன்அவர்களுக்கும், புரட்சித் தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவர் அன்பு அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த்தி அவர்களுக்கும், தமிழர் சேனைக் கட்சித் தலைவர் அன்பு அண்ணன் எரிமலை மு.இராமச்சந்திரன்அவர்களுக்கும்,


முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் தலைவர் தம்பி கவிக்குமார்அவர்களுக்கும், 24மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவைத் தலைவர் அன்புத்தம்பி ஜெகநாத் மிஸ்ராஅவர்களுக்கும், அன்பிற்குரிய இளவல் சுரேஷ் காமாட்சி, பாசமிகு தம்பி ஆதம் பாவா, அன்புத்தம்பி நடிகர் இயக்குனர் போஸ் வெங்கட், தம்பி விருமாண்டி, அன்புத்தம்பி சண்முகம் முத்துசாமி, சமூகச் செயற்பட்டாளர் நடிகை கஸ்தூரி, நடிகர் அன்புத்தம்பி புகழ் ஆகிய திரைத்துறையைச் சேர்ந்த பெருமக்களுக்கும்,


மூத்த பத்திரிகையாளர் ஐயா பா.ஏகலைவன் அவர்களுக்கும், அன்பிற்கினிய தம்பிகள் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கர், பிரசாந்த் ரங்கசாமி, அருள்மொழிவர்மன், மாதேஷ், அருண் மாணிக்கம் ஆகிய ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், மற்றும் அரசியல், திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார் சீமான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்