சென்னை: நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள விஜய்க்குப் பின்னால் மிக முக்கியமான ஒரு அரசியல் புள்ளி இருப்பதாக பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.
விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கியது முதலே தமிழக அரசியலிலும், சோஷியல் மீடியாக்களிலும் அவரை பற்றிய விஷயம் தான் அதிகமாக பேசு பொருளாக இருந்து வருகிறது. அதிலும் அவர் சமீபத்தில் நடத்திய கட்சியின் முதல் மாநாட்டில் நிகழ்த்திய முதல் அரசியல் உரையை கேட்டு அரசியல் கட்சிகள் மட்டுமல்ல மக்களே ஆச்சரியப்பட்டு போய் விட்டார்கள். திரையில் டான்ஸ் ஆடி, ஃபைட் செய்யும் விஜய் தானா இது என வியந்து போய் விட்டார்கள்.
முதல் அரசியல் மாநாடு, முதல் முறையாக லட்சக்கணக்கில் தன்னை நம்பி, தனக்காக திரண்டு கூட்டத்திற்கு நடுவே பேசுகிறோமே என்ற பதற்றம், தடுமாற்றம் இல்லாமல் சரளமாக, கைதேர்ந்த, பல அரசியல் மேடைகள் கண்ட தலைவனை போல் சொல்ல வந்த விஷயங்களை நறுக்கு தெறித்தாற் போல் புட்டு புட்டு வைத்து விட்டார் விஜய். அரசியல் கட்சி துவங்கியது முதல் அரசியல் களம், சோஷியல் மீடியா என அனைத்தையும் இன்ச் இன்ச்சாக கவனித்து அனைவரும் இதுவரை முன் வைத்த விமர்சனங்களுக்கு மட்டுமல்ல இந்த மாநாட்டிற்கு பிறகு எப்படி எல்லாம் கமெண்ட்ஸ் வரும் என்பதையும் நன்கு அலசி ஆராய்ந்து பட்டியல் போடுவது போல் தன்னுடைய உரையை மிக நேரத்தியாக நிகழ்த்தினார் விஜய்.
அரசியலுக்கு புதியவரான ஒருவரால் எப்படி இப்படி தெளிவாக பேச முடியும் என்ற வியப்பு அனைவருக்கும் இருந்தது. இந்த சந்தேகம் அரசியல் கட்சிகளுக்கும் எழுந்து தான் ஏ டீம், பி டீம் என்ற பேச்சு மறுபடியும் கிளப்பி உள்ளது. திடீரென அரசியலுக்கு வந்த ஒருவரா எப்புட்ரா இப்படியெல்லாம் கலக்க முடியும் என்ற சிந்தனையுடன் விசாரித்தபோதுதான் ஒரு சூப்பரான விஷயம் கிடைத்தது.
விஜய்யின் பின்னால் இருக்கும் விஐபி
விஜய்யின் அரசியல் ஆசை, அவரது சிந்தனை, அவரது திட்டங்கள், அவரது கனவுகள் இவை அனைத்தும் கரெக்டான பாதையில் கொண்டு சென்று, அதை ஒருங்கிணைத்து, அரசியல் புயல்களை சமாளிக்கக் கூடிய வகையிலான பாதை அமைத்து அவருக்கு பின்புலமாக இருந்து, வழி காட்டிக் கொண்டிருப்பது தமிழ்நாட்டின் மிக முக்கியமான, பழுத்த அரசியல் அனுபவம் படைத்த ஒரு மூத்த திராவிடத் தலைவர்தானாம். தென் மாவட்டத்தை சேர்ந்த விஐபி தலைவர் இவர். சொந்த செல்வாக்குடன் வலம் வரும் அனுபவம் மிக்க தலைவர் இவர்.
எம்ஜிஆரிடம் அரசியல் பாடம் கற்றவர். எம்ஜிஆரின் மிக மூத்த ரசிகராக இருந்தவர் எம்ஜிரின் நிழல் போல ஒரு காலத்தில் திகழ்ந்தவர். அவரின் செல்லப் பிள்ளையாக திகழ்ந்தவர். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவுடனும் குறுகிய காலம் பயணித்தவர். இவர்கள் மட்டுமல்லாமல் பல மூத்த அரசியல் தலைவர்களுக்கு மிக நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர். இவர்தான் தற்போது திரை மறைவில், தான் கற்ற அரசியல் நுணுக்களை விஜய்க்கும் கற்றுக் கொடுத்து வருகிறாராம். இவரது ஐடியாப்படிதான் விஜய்யின் பேச்சில் எம்ஜிஆரைப் பாராட்டும் வரிகள் சேர்க்கப்பட்டதாம். இதன் மூலம் அதிமுகவினரை ஈசியாக இழுக்கலாம் என்பது இவரது யோசனை.
சீட் கிடைக்காத கோபம்
எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் இருந்த அவர் தற்போது அவர்கள் கட்சிக்கு முற்றிலும் மாறுபாடான கொள்கை கொண்ட ஒரு தேசிய கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த முக்கியத் தேர்தலில் இவருக்கு சீட் தரப்படவில்லை. இதற்கு திமுகதான் காரணம் என்பது இவரது வருத்தம். இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் செய்யாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில்தான் விஜய் தரப்பிலிருந்து இவரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. யோசித்துப் பார்த்த அவர் இப்போதைக்கு பின்னணியில் இருக்கிறேன். சமயம் வரும்போது பகிரங்கமாக வெளியில் வந்து கொள்கிறேன் என்று கூறி வந்த ஆபரை ஏற்றுக் கொண்டாராம்.
இவர்தான், விஜய்க்கு பின்னால் இருக்கிறார் என்பது வெளியே தெரியாத வகையில் மிக கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். தேர்தல் சமயம் நெருங்கும்போது இவர் வெளிப்படையாக வரத் திட்டமிட்டுள்ளாராம். அதற்குள் கட்சியின் கட்டமைப்பை வலுவாக்கும் பொறுப்பும் இவருக்குத் தரப்பட்டுள்ளதாம். யாரையெல்லாம் கட்சியில் சேர்க்கலாம், எப்படியெல்லாம் உத்திகள் வகுக்கலாம் என்பது குறித்தும் இவர் யோசனைகள் கொடுத்து வருகிறாராம்.
இந்தத் தலைவர் முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் நெருக்கமாக இருந்தவர்தான். அவரது அரசியல் ஆசைகளுக்கும் கூட இவர் நிறைய ஐடியாக்கள் கொடுத்து வந்தார். ஆனால் ரஜினி கடைசி வரை அரசியலுக்கே வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தவர்களில் இந்த தலைவரும் ஒருவர். இப்போது விஜய் பக்கம் வந்துள்ள இவர், விஜய்யை ஆட்சி பீடத்தில் அமர வைக்க உறுதி பூண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
பின்னணியில் சமுதாய வாக்குகள்
இந்த தலைவருடைய சமுதாய வாக்குகள் தென் தமிழ்நாட்டில் முக்கியமான வாக்கு வங்கியாக உள்ளது. அந்த சமுதாயத்தினர் மத்தியில் இவருக்கென்று தனி செல்வாக்கும் உள்ளது. அந்த வாக்கு வங்கி தற்போது அதிமுக, திமுக என பிரிந்து கிடக்கிறது. இதில் அதிமுக பக்கம் இருக்கும் மொத்த வாக்குகளையும் வளைத்தாலே போதும், விஜய்க்கு மிகப் பெரிய பலம் கிடைக்கும். அதேபோல திமுகவில் ஏமாற்றத்தில் இருக்கும் தங்களது சமுதாய வாக்குகளையும் வளைக்கும் திட்டமும் இந்தத் தலைவரிடம் இருக்கிறதாம்.
எனவே எல்லாவற்றையும் முன் கூட்டியே திட்டமிட்டு, பேசி வைத்து விட்டு, தெளிவாக பிளான் போட்டு விட்டுத்தான் விஜய் அரசியலில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. இதனால் தான் பல கட்சிகளிடையே பெரும் பீதியும் நிலவுவதாக சொல்கிறார்கள். திட்டமெல்லாம் ஓகேதான்.. அது செயல்பாட்டுக்கு வரும்போதுதான் வெற்றியா இல்லையா என்பது தெரிய வரும். பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}