அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

Apr 06, 2025,01:07 PM IST

சென்னை: அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்தித்தாக ஊடகங்கள் எழுதுவது சரியில்லை. சந்தித்தால் சந்தித்தேன் என்று சொல்லப் போறேன்.. இதில் என்ன பயம், தயக்கம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.


கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் பல்வேறு அதிரடிகள் அரங்கேறி வருகின்றன. அதிமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இதனால் மீண்டும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படப் போவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. 


மறுபக்கம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதேபோல சி.வி.சண்முகம், அமித்ஷாவைச் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இடையில், அண்ணாமலையை மாற்றப் போவதாக மீண்டும் பரபரப்பு கிளம்பியது. 11ம் தேதிக்குப் பிறகு அண்ணாமலை மாற்றம் நிச்சயம் என்றும் செய்திகள் கூறுகின்றன. அவரும் தலைவர் பதவியெல்லாம் வெங்காயம் என்று பேசி வருகிறார்.




இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக தகவல்கள் வெளியாகின. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சீமான், ஏன் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் என்ற விவாதமும் கிளம்பியது. ஆனால் இந்த செய்திகளை சீமான் மறுத்துள்ளார்.


இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சந்தித்தால் சந்தித்தேன் என்று சொல்லப் போறேன். எனக்கென்ன பயமா.. தயக்கமா. சந்திச்சால் சந்திச்சேன் அப்படின்னு சொல்வேன். நீங்களாக சந்திச்சாரா என்று பேசுவது சரியில்லை.  ரஜினிகாந்த் என்ன பாஜகவா. அன்பின் நிமித்தமாக அவரை சந்தித்தேன் பேசினேன். சந்தித்ததையும் நானே சொன்னேன். எனவே நீங்களாக கற்பனை செய்யாதீர்கள்.


தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவேன் அப்படின்னு ஏற்கனவே சொல்லிட்டேன். அப்படி இறுக்கும்போது கூட்டணி வைப்பதாக இருந்தால் நான் ஏன் வேட்பாளரை அறிவிக்கப் போறேன் என்று கேட்டுள்ளார் சீமான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாலேகான் குண்டுவெடிப்பு.. பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உட்பட 7 பேர் விடுதலை

news

முருகனுக்குக் கிடைக்காமல் போன ஞானப்பழத்தின் கதை தெரியுமா?

news

பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!

news

மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 31, 2025... இன்று இந்த ராசிகளுக்கு நல்ல செய்தி தேடி வரும்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்