சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

Feb 09, 2026,05:39 PM IST

டில்லி : நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மக்களவைச் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் I.N.D.I.A கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், விவாதங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இந்தக் கூட்டத்தில் தீர்மானம் குறித்து மட்டுமின்றி, நடப்பு கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய பிற முக்கிய விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள், மத்திய அரசின் பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு எதிராக வலுவான வாதங்களை முன்வைத்தல் ஆகியவற்றை எழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.




சபாநாயகர் பதவி என்பது நடுநிலையானது என்ற போதிலும், எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள இந்தத் தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா மீதான விவாதத்தின் போது பிரதமர் உரை இல்லாமலேயே அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பிரதமர் உரை நிகழ்த்துவதாக கூறி இரு முறை ரத்து செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க பயந்து தான் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை என்று எதிர்க்கட்சி எம்.பி.,யான ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிலர் பிரதமரை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும், அத்தகைய அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கவே அவரை அவைக்கு வர வேண்டாம் என தான் வலியுறுத்தியதாக தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இன்று சபாநாயகருக்கு எதிராகவடே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Mini Series: பயணப்பிரியன் .. விஷாலின் விளையாட்டுகள் 5

news

மகாவீரர்.. அன்பின் வழியை காட்டினார்.. உயிர் அனைத்தும் ஒன்று என்றார்!

news

மொத்த குடும்பமும் விஜய்க்கு கடனாளிகளா?.. புஸ்ஸி ஆனந்த் பெயரும் இருக்கு.. இதைக் கவனிச்சீங்களா?

news

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை: செல்வப்பெருந்தகை

news

ஏன் இப்படி?

news

ADR Report: புதுச்சேரியில் 23% வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்... 41% பேர் கோடீஸ்வரர்கள்!

news

Case against Vijay: தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்?.. தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி

news

Gold Rate: தொடர் உயர்வில் இருந்த தங்கம் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!

news

CM MK Stalin campaign: திருவாரூரில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்